

மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
திமுகவின் மிகப்பலமான கோட்டையான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலினின் செல்வாக்கு எப்படி இருக்கிறது? மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் ஆய்வு சில அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்துள்ளது. 2021-ல் 68.90% வாக்குகளை வாரிச் சுருட்டிய உதயநிதி, 2024-ல் 64.15% ஆகச் சரிந்துள்ளார். அதே வேளையில், அதிமுக வெறும் 17%-லிருந்து 27.17% ஆகத் தனது வாக்குகளை அசுர வேகத்தில் உயர்த்தியுள்ளது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
சாலைகளை அடிக்கடி தோண்டும் பிரச்சினை மற்றும் மின் கட்டண உயர்வு ஆகியவை இந்த தொகுதியின் 41.18% நடுத்தர வர்க்க வாக்காளர்களைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. பூத் வாரியான தரவுகளைப் பார்த்தால், திமுக 2021-ல் 130 பூத்துகளில் வலுவாக இருந்தது. ஆனால் தற்போது அது 89 பூத்துகளாகக் குறைந்துள்ளது. அதிமுக 44 பூத்துகளில் தனது பலத்தை நிரூபித்துள்ளது.
2026 தேர்தல் கணிப்பு தரவுகள்:
2026 தேர்தலில் திமுக 44% வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக 34% வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக மற்றும் நாம் தமிழர் கூட்டணி 17% வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளது. 10% வாக்கு வித்தியாசம் என்பது திமுகவுக்குத் தற்போதைக்குச் சாதகமாக இருந்தாலும், அதிமுகவின் வளர்ச்சி சற்றே உதயநிதி தரப்புக்கு சவாலை ஏற்படுத்தலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.