மும்மொழி கொள்கை விவாதம்: அமைச்சர் பிடிஆர் மகன் எங்கு படிக்கிறார்? - அண்ணாமலை சரமாரி கேள்வி!

திமுகவிற்கு தேர்தல் நிதி மதுபான ஊழலில் தான் வருகிறது. டாஸ்மார்க் நிறுவனம் மதுபான கொள்ளையை இவர்கள் தான் வடிவமைக்கிறார்கள் - அண்ணாமலை
annamalai press meet
annamalai press meet
Published on
Updated on
2 min read

அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மகன் எங்கு படிக்கிறார்? மும்மொழி கொள்கை சம்பந்தமாக பதிலடி கொடுத்த பாஜக தலைவர் அண்ணாமலை..!

தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியில் பாஜக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், மூன்று மொழி கொள்கைக்கு ஆதரவாக 10 லட்சம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. கிராமங்களில் கட்சியினர் சில மக்களை சந்திக்க ஆரம்பித்துள்ளனர். மே மாதம் முடியும்போது ஒரு கோடி என்கின்ற இலக்கை எட்டுவோம்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யா மொழி மூன்று மொழி படிக்கக்கூடிய மாணவர்கள் மொத்தமே ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தான் உள்ளனர் என்று கூறுகிறார். சிபிஎஸ்இ பள்ளியில் 1635 பள்ளிகள் உள்ளன. 15 லட்சத்தில் 20 ஆயிரம் குழந்தைகள் படிக்கின்றனர். 30 லட்சம் குழந்தைகள் படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் குழந்தைகள் 479 பள்ளிகள் உள்ளன. தமிழ் மொழியும் வேறு மொழிகளும் படிக்கிறார்கள். மூன்று மொழி மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கிற 4479 பள்ளிகள் உள்ளன. சராசரியாக 14 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள்.

தமிழகத்தில் டாஸ்மார்க் ஊழல் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும். திமுகவிற்கு தேர்தல் நிதி மதுபான ஊழலில் தான் வருகிறது. டாஸ்மார்க் நிறுவனம் மதுபான கொள்ளையை இவர்கள் தான் வடிவமைக்கிறார்கள். தமிழகத்தில் பெண்களின் தாலியை எடுத்து ஆட்சியாளர்கள் ஆட்சியில் அமர்ந்துள்ளார்கள் என்பதுதான் இன்றைய நிலை..,

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் இந்திய குடிமகனா தமிழகத்தில் எந்த எம் பி, எம் எல் ஏக்கள் குழந்தைகள் இரு மொழி கொள்கை படிக்கிறார்களா? அரசு பள்ளியில் படிக்கக்கூடிய 52 லட்சம் குழந்தைகளுக்கும் தனியார் பள்ளியில் படிக்கக்கூடிய ஒரு குழந்தைகளுக்கும் சமமான கல்வி இருக்க வேண்டும்.

தமிழகத்தில்பள்ளி கல்வித்துறை திவாலாகி உள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மொழியைத் தவிர ஆங்கில மொழி எழுத்து படிக்க கூடியவர்கள் அதிகமாக உள்ளனர். 27 சதவீத பேர் ஆங்கிலத்தை எடுத்து படிக்கின்றனர்.

தமிழகத்தில் கற்றல் அறிவு குறைந்துள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார் மதுபான ஊழல் வெளியே வந்து விடக்கூடாது என்பதற்காக திமுக அதிகமாக நாடகமாடி வருகிறது

அரசு பள்ளி மாணவர்கள் இப்படித்தான் படிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் கனிமொழிக்கு என்ன உள்ளது. கனிமொழி மகனுக்கு ஒரு நியாயம், ஏழை மாணவர்களுக்கு ஒரு நியாயமா? காங்கிரஸ் 386 பயன்படுத்தி ஆட்சியிலிருந்து உங்களை நீக்கியது அதுதான் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது..

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்

பள்ளிகளில் கற்றல் திறன் குறைகிறது.

இது ஜனநாயக நாடு இலங்கை நட்பு ரீதியான நாடு இலங்கையில் மார்க்சிஸ்ட் சித்தாந்தம் கொண்ட தலைவர் இருக்கிறார் சீனாவோடு நெருக்கமாக உள்ள தலைவர் அதனை நாம் சமப்படுத்தி செல்கிறோம். மீனவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக நாளை மாலை 5 மணிக்கு தமிழக மீனவர்கள் 36 பேர் தமிழக பாஜகவினரோடு சிந்து வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க உள்ளனர்.

இலங்கை அரசு கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக கொண்டு வருவதற்கு விடுபட்ட மீனவர்களுக்கு உள்ள தேவைகளையும் உடனடியா தமிழகத்தில் 36 மீனவர்கள் ஒன்றாக அனுப்ப செல்கிறோம் ராமநாதபுரம் நாகப்பட்டினம் புதுச்சேரி பிரதமர் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு செல்ல இருக்கிறார் கச்சத்தீவில் தவறாக கொடுத்து விட்டார்கள். அதில் திரும்ப கொண்டு வர வேண்டும் என்பதை பாஜகவின் அதிகார கோட்பாடு என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com