ஒவ்வொரு குடும்பத்திற்கும் "6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்".. ரூ.15,000 உதவித் தொகை - விஜய்

அண்ணன் சீர் திட்டத்தில் ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுப் புடவை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்....
ஒவ்வொரு குடும்பத்திற்கும் "6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்".. ரூ.15,000 உதவித் தொகை - விஜய்
Published on
Updated on
2 min read

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார் அக்கட்சியின் தலைவர் விஜய்.  2000 பெண்களுக்கு மட்டுமே  அனுமதி தரும் வகையில் QR கோட் மூலம் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் சட்ட மன்ற தேர்தலில் முதல் முறையாக களமிறங்கும் த.வெ.க. தஞ்சாவூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பல வாக்குறுதிகளை அறிவித்த நிலையில் அதனை தொடர்ந்து நடந்த சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் மகளிருக்கான பல சிறப்பு வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

ஆட்சி அமைந்த உடன் 60 வயது வரையிலான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும் என்றும், அதேநேரத்தில், மத்திய, மாநில ஊழியர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.  அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் எனும் பெயரில் ஒவ்வொரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தங்கையின் திருமணத்திற்கு அண்ணன் சீர் திட்டத்தில் ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுப் புடவை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

காமராஜர் கல்வி உறுதி திட்டம்- 1 முதல் 12ம் வகுப்பு வரை இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயிலும் வகையில் உறுதி செய்யப்படும். ஒவ்வொரு மாணவ, மாணவியின் பெற்றோருக்கு அல்லது பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

அதனை தொடர்ந்து மகளிர் பாதுகாப்பு நலனை கொண்டு த.வெ.க. ஆட்சி அமைந்த உடன் அஞ்சலையம்மாள் அதி விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் பெண்கள் பாதுகாப்புக்கு மாநிலம் முழுவதும் 500 குழுக்கள் அமைக்கப்படும்.

அதனை தொடர்ந்து தற்போது இயங்கி வரும் மகளிர் விடியல் பயணத்தை விமர்சித்து,  த.வெ.க. ஆட்சியில்  வெற்றிப்பயணம் எனும் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம். அதனை தொடர்ந்து பொதுப் போக்குவரத்தில் ஸ்மார்ட் Panic பட்டன் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கப்படும். ரூ.5 லட்சம் வரையிலான வட்டியில்லா நிதி. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும் எனவும் பல வியக்கும் மகளிர் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். இவைஅனைத்தும் வெறும் சாம்பிள் தான் இன்னும் இச்சிறப்பு திட்டங்கள் உள்ளது எனவும் தெரிவித்தார்.  வழக்கம் போல் தனது ஸ்டைலில் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி விழாவில் கலந்துகொண்ட த.வெ.க. உறுப்பினர்களுக்கு ஊக்கமளித்தார். ஆனால் மனைவி  சங்கீதா விவாகரத்து மனு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com