

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் தற்போது 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள இந்த விரிவாக்கத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளியில் தொடங்கி வைத்தார்.
பள்ளிக்கு வந்த முதலமைச்சர் விஜயை, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய் மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறினார்.
இந்த காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் மூலம் 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவ மாணவிகள் கூடுதலாக பயன் பெறுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 44,984 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.217.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உயர்ந்துள்ளது.
திட்டத்தை தொடங்கி வைத்த பின் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினர் முதல்வர் விஜய். மாணவ மாணவிகளை உணவை உண்ண சொல்லி தானும் உண்ண தொடங்க நினைத்த முதலமைச்சர்.. குழந்தைகள் உண்ணாமல் இருப்பதை பார்த்து காத்திருந்தார். அவர்கள் இறைவனை வணங்கி விட்டு உன்ன தொடங்கிய பின் அருகில் இருந்த குழந்தையிடம் இப்போது உண்ணலாமா என்று கேட்டு உணவருந்த தொடங்கினர். பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல், சாம்பார் ஆகியவை மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பின்னர் மாணவர்களை சந்தித்து உரையாற்றினார். வகுப்பறைக்கு சென்ற அவர் மாணவர்களுடன் உரையாடி, பாடங்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்து விசாரித்தார்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து பின்பு வெளியே வந்த முதலமைச்சர், சாலை ஓரத்தில் காத்திருந்த பொதுமக்களுக்கு கையாசைத்து நன்றி தெரிவித்தார். அங்கு காத்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவரின் தாயிடம் கோரிக்கை கேட்டு அவர்களின் மனுவை பெற்றுக்கொண்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.