“திருச்சி மக்களுக்கு நன்றி” - இன்னுமும் DMK vs TVK என பேசும் முதல்வர் விஜய்! ஊடகங்களை புறக்கணிக்கிறதா தவெக அரசு?

"ஏன் நாங்கல்லாம் கோட் சூட் போடக்கூடாதா?" என்று
CM vijay in trichy
Published on
Updated on
2 min read

வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி சொல்வதற்காக இன்று திருச்சி வந்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஜோசேப் விஜய். 2026 சட்டமன்ற தேர்தலில்   திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஜய், திருச்சி தொகுதியில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அதையடுத்து மே 10 அன்று தமிழக முதலைமைச்சராக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார் விஜய். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு சென்னைக்கு பிறகு திருச்சிக்கு தான் வருகை புரிந்துள்ளார். இன்று திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் நன்றி தெரிவிக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அங்கு 5000 பேர் மட்டுமே கூடும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனையடு அவர்களுக்கு QR Code மூலம் அனுமதி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பங்கு பெறும் இந்த விழாவில் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கங்களுக்கு தடை விதிக்க பட்டுள்ளது. அவர்களுக்கு அரங்கத்திற்கு வெளியே தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் பங்கேற்கும் ஊடகங்களுக்கு விழா அரங்கில் இடமில்லை என்பது இதுவே முதன்முறை.'

நன்றி தெரிவிக்கும் விழாவில் பேச தொடங்கிய முதல்வர், “நம்மை பற்றியும், நமது அரசியல் பற்றியும், நாம் பேசுவது பற்றியும் கிண்டல் கேலி செய்வது வழக்கம்தான். அவர்களுக்கு என் பக்கத்தில் இருந்து ஒரே ஒரு கோரிக்கை தயவு செய்து அப்படி பேசுவதை நிறுத்தி விடாதீர்கள். நீங்கதான் எனது எனர்ஜி ஃபோர்ஸ்” என்று எதிர்வினைகளுக்கு பதிலளித்தார். அதைதொடர்ந்து, முதலமைச்சர் விஜய் கோட் போடுவது குறித்த விமர்சனங்களுக்கு "ஏன் நாங்கல்லாம் கோட் சூட் போடக்கூடாதா?" என்று நடிகர் தனுஷ் ஸ்டைலில் பேசினார். “அதிகாரிகளுக்கும், ஆதிக்க சக்திகளும் தான் கோட் போடவேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். நமது மதத்தின் நிறத்தின் போலவே கருப்பு வெள்ளை நிறத்தில் தான் கோட் போட்டு வருவதாக அவர் கூறினார். எல்லா இடங்களிலும், இந்த விஜய் கருப்பு வெள்ளையாக இருப்பான் என்பதை உணர்த்தவே அவ்வாறு கோட் போடுவதாகவும் விளக்கம் கொடுத்தார். 

தேர்தல் பிரசாரத்தில் எப்படி பேசினாரோ அப்படியே இன்னுமும் எதிர்க்கட்சியான திமுகவை பற்றியே அதிகம் பேசினார் விஜய். “திமுக தீயசக்தி மட்டுமில்லை மக்களை விட்டு சென்ற தூர சக்தி” என்று பேசிய விஜய் “சாதி, மதம், பணம் இவற்றை இந்த தேர்தலில் உடைத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டார். மேலும் “வரப்போகும் இடைத்தேர்தலில் உங்கள் வீட்டில் இருந்து வரும் ஒருவரைத்தான் நிற்க வைப்பேன், அவரை வெற்றி பெற செய்யுங்கள்” என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசியா அவர் “234 தொகுதிகளும் நமது தொகுதிதான், அதில் யார் வெற்றி பெற்றிருந்தாலும் சரி. பெரம்பூரோ, திருச்சி கிழக்கோ அவை இரண்டும் எனது இரு கண்கள் மாதிரி. அதிலும், திருச்சி கிழக்கு எனது செல்ல பிள்ளை மாதிரி” என மக்கள் மத்தியில் பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com