

திருவண்ணாமலையில் நேற்று அதிமுக தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “பாஜகவுடன் கூட்டணி வைப்பது அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டு கருத்து கேட்டபோது வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கூட்டணி வேண்டாம் என தெரிவித்தனர். அதனடிப்படையில் எடப்பாடியார் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்றார். ஆனால் எடபாடியார் தண்னிச்சையாக செயல்படுகிறார் என நத்தம் விஸ்வநாதன் வேலுமணி கூறுவது கண்டிக்கத்தக்கது” என்றும் குறிப்பிட்டார். மேலும் “நத்தம் விசுவநாதன் சி.வி சண்முகம் ஆகியோர் இணைந்து எடப்பாடி பழனிசாமியால் தான் அதிமுக தோல்வியை தழுவியது என கூறுவது தவறு என்றும், அந்தந்த மாவட்டத்தில் தோல்வியுற்றவர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் பதவி விலக வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி காட்டமாக தெரிவித்திருந்தார். மேலும் “நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, சண்முகம் ஆகியோர் தவெக உடன் பணியாற்றும் இவர்களின் வழகாட்டுதலால் தான் அதிமுக தோல்விக்கு காரணம்” என்றும் குற்றம்சாட்டினார்.
சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.. மக்களால் அல்ல.. 2021 ஆட்சியை இழந்து எதிர்க்கட்சி தலைவைராக இருந்தார். 2026-ல் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தார். நாங்கள் எல்லோரும் சேர்ந்து அவரை பொது செயலாளராக ஆக்கினோம். ஆனால் அவர் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை ஒரு சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என எதிலும் வெற்றி பெறவில்லை. 47 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றதற்கு காரணம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகிறார்.. மீதி இருக்கிற 187 தொகுதிகளில் எடப்பாடி செல்லாக்காசாகிவிட்டாரா? செல்வாக்கு இல்லையா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் “எங்களை தாழ்த்தி பேசுவதாக நினைத்துக்கொண்டு வர தலைவராக ஏற்று இருக்கும் எடப்பாடியை தரம் தாழ்ந்து பேசுகிறார்” என்றும் சேலம் தொகுதியில் EPS மாவட்ட செயலாளராக இருக்கும் போது அங்கு ஏழு தொகுதிகளில் ஏன் அவருக்கு செல்வாக்கு இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினர்.
நாடாளுமன்ற தேர்தலில் அவர் சொந்த பூத்திலையே இரட்டை இலைக்கு கம்மியான வாக்கு.. அப்போ அவர் சொந்த ஊரிலேயே அவருக்கு செல்வாக்கு இல்லையா என்றும் கட்டமாக கேள்வி எழுப்பினர். மேலும் நாங்கள் தரம் தாழ்ந்து பேச விருப்பமில்லை.. அன்றைக்கு இருந்த அரசியல் சூழல், கூட்டணி அமைப்பு இதனால் தோல்வி ஏற்பட்டது. வெற்றி பெற்றால் அது எடப்பாடியாருக்கு.. தோல்வி அடைந்தால் அந்தந்த மாவட்ட செயலாளர் பொறுப்பா?" என்றும் "வடமாவட்டங்களிலும் தோல்வி.. சென்னையில் அதிமுக துடைத்து எறியப்பட்டு விட்டது” இதற்கெல்லாம் யார் பொறுப்பு என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் "வெற்றி பெற்றால் என்னால்.. தோல்வி அடைந்தால் நிர்வாகிகளால் .. இப்படி பழியை தூக்கி போடும் தலைவரை இந்தியாவில் எந்த கட்சியிலாவது பார்த்து இருக்கிறோமா?" என்றும் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து சரி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.