
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் சுந்தர் நகர் முதல் தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் 91 வயதான முதியவர் கந்தசாமி இவர் தனது வீட்டில் வாழை மற்றும் எலுமிச்சை மரங்களை வளர்த்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் நிஷாந்த்.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிஷாந்த்திற்கு திருமணமாகி சிந்துஜா என்று மனைவி மற்றும் குடும்பத்துடன் கந்தசாமியின் வீட்டிற்கு பக்கத்துக்கு வீட்டில் வசித்து வருகிறார். கந்தசாமி அவரது வீட்டில் வளர்க்கும் வாழை மரம் நிஷாந்தின் காம்பவுண்ட் பகுதியில் வந்துள்ளது.
வாழை செடிகளில் பூச்சிகள் இருந்ததும் அதில் இருந்து விழும் காய்ந்த இலைகளும் நிஷாந்தின் வீட்டில் இருந்தவர்களுக்கு இடையூறாக இருந்துள்ளது. இதனால் பலமுறை நிஷாந்தும் சிந்துஜாவும் மரங்களை வெட்ட அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் கந்தசாமி எந்தவித பதிலையும் அளிக்கும் இருந்துள்ளார்.
இதனால் நிஷாந்தும் சிந்துஜாவும் தங்கள் வீட்டு காம்பவுண்ட் பகுதியில் உள்ள மரங்களின் கிளைகளை நேற்று முன்தினம் வெட்டி அகற்றியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி நேற்று காலை வீட்டின் முன்புறம் சிந்துஜா கோலம் போட்டுக் கொண்டிருந்த நிலையில் அரிவாளால் சிந்துஜாவின் காலிலும் கையிலும் வெட்டியுள்ளார்.
சிந்துஜா தப்பிக்க ஓடியபோதும் விடாமல் முதியவர் துரத்தி சென்று வெட்ட முயற்சித்துள்ளார். சிந்துஜா சத்தம் போடவே அவ்வழியே சென்ற பொதுமக்கள் அக்கம் பக்கத்தினரும் சிந்துஜாவை முதியவரிடம் இருந்து காப்பாற்றி காரில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் முதியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முதியவரை பரிசோதனைக்கு போலீசார் உட்படுத்தி உள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்