விஜய்க்கு பெருகும் ஆதரவு! - "ஆதரவு அளித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி" - விரைவில் ஆட்சியமைக்க போகிறாரா விஜய்?

"இடதுசாரிகள் என்ன முடிவினை எடுக்கிறார்களோ அதனை பின்பற்றியே விசிக முடிவு எடுக்கப்படும்" - விசிக தலைவர் திருமாவளவன்
தவெக-விற்கு ஆதரவளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தவெக-விற்கு ஆதரவளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெக-விற்கு ஆதரவளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
Published on
Updated on
2 min read

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவைப்படுவதாகவும், அதனால் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டால் உடனடியாக ஆட்சியமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுப்பாதாக கூறப்பட்டது. மேலும் தவெக-விற்கு காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி ஆதரவு தந்த நிலையில் மேலும் 6 MLA -க்கள் தேவைப்படுவதால் தவெக தலைவர் விஜய் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்குமாறு கடிதம் எழுதினார். கலந்து ஆலோசித்துவிட்டு பதிலளிப்பதாக அவர்கள் கூறிய நிலையில் விரைவில் கூட்டணி அமைக்க ஆதரவு அளிப்பது குறித்து பதிலளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இன்று (மே 8) காலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் மாலையில் மாநில பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. காலையில் நிர்வாகிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டது. தற்போது கூட்டப்பட்டுள்ள மாநில பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகளோடு பேசியவை மற்றும் அவர்களோடு எடுக்கப்பட்ட முடிவு தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், மாநில பொதுக்கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும், இதில் மாநில நிர்வாகிகளும் தங்களது நிர்பந்தங்களை வைக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் விசிக-வின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கூடும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. இதனைத்தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவனுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே தொலைபேசி வாயிலாக பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் அனைத்தும் பேசி கலந்தாலோசித்து இறுதி முடிவு கூறப்படும் என்ற கூறப்பட்ட நிலையில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் சென்றிருந்தார். தற்போது தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் இருந்து ஆதரவு அளிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விசிக-வும் தங்களது பதில்களை விரைவில் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆளுநர் அர்லேகரை இன்று மாலை தவெக தலைவர் விஜய் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை உள்ள நிலையில் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது தவெக-வில் 2 இடங்களில் வெற்றிபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி MLA-க்கள் ஆதரவு தருவதாக கூறப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் இன்று மாலை 6 மணியளவில் ஆளுநரை சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட நாட்களாக இருந்த ஆட்சியில் அமரும் இழுபறி, தற்போது முடிவிற்கு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்னும் சிலமணி நேரங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தங்களது ஆதரவுகளை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசிக தலைவர் திருமாவளவன் இதற்கு முன்பு அளித்த பேட்டிகளில், "இடதுசாரிகள் என்ன முடிவினை எடுக்கிறார்களோ அதனை பின்பற்றியே விசிக முடிவு எடுக்கப்படும்" என்று கூறிய நிலையில் விசிக-வும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தற்போது கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com