வெளியாகும் மிக முக்கிய அறிவிப்பு? உச்சக்கட்ட கலக்கத்தில் எம்.எல்.ஏ.க்கள் - விட்டு விளாச காத்திருக்கும் முதல்வர் விஜய்!

எதிர்க்கட்சியினர் லிஸ்ட் போட்டு தாக்கும் அளவுக்கு அவப் பெயர் சேர்ந்துள்ளதால், இன்று முதலமைச்சர் அனைத்து MLAகளுக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுக்கவுள்ளார்.
TVK MLAs in High Anxiety as Chief Minister Vijay Prepares to Lash Out!
வெளியாகும் மிக முக்கிய அறிவிப்பு? உச்சக்கட்ட கலக்கத்தில் எம்.எல்.ஏ.க்கள் - விட்டு விளாச காத்திருக்கும் முதல்வர் விஜய்!
Published on: 
Updated on: 
2 min read

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

கடந்த சில நாட்களில் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கின்றன.

ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு, மின் தட்டுப்பாடு போன்ற நிர்வாக குறைபாடுகளை குறிவைத்து வந்த எதிர்க்கட்சிகளுக்கு தாங்களே பாயிண்ட் எடுத்துக் கொடுப்பது போல சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் இருந்துள்ளன.

குறிப்பாக துணை சபாநாயகராக இருக்கும் ரவிசங்கர் ஒருவரை தாக்கும் வீடியோ வைரலானதும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதும் ஆட்சிக்கு கடும் அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விமர்சித்த திமுக முன்னாள் சபாநாயகர் அப்பாவு, "உங்கள் ஆட்சி பொறுப்பெற்ற நாள் முதல் பொது வெளியில் போதைப்பொருள் நொறுக்கிய #கில்லிசரத் அமைச்சர், தவெக நிர்வாகியை ஜட்டியோடு விட்டு அடித்து கொன்று விடுவேன் என்ற #ஜகதீஸ்வரி அமைச்சர், பாலம் கட்ட 3 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டிய அமைச்சர் #கீர்த்தனாவின் உறவினர், அரசு வழக்கறிஞர் பணிக்கு ரூபாய் 15 லட்சம் அமைச்சர் #புஸ்ஸிஆனந்திடம் கொடுத்து ஏமாந்து நீதிமன்றம் சென்ற தவெக நிர்வாகி, கவுன்சிலர் பதவிக்கு தவெக நிர்வாகிகளிடம் பல லட்சம் கேட்ட மதுரை #முஸ்தபா MLA வின் ஆடியோ , குடிநீர் பிரச்சினைக்கு மனு கொடுக்க வந்தவரை மது போதையில் கொலை வெறி தாக்குதல் நடத்திய துணை சபாநாயகர் #ரவிசங்கர், கள்ளக்குறிச்சி MLA #அருள்விக்னேஷ் மது போதையில் ஆட்சியர் அலுவலகம் சென்று பாலியில் அலம்பல் குறுஞ்செய்தி மூலம் பாலியல் சீண்டல், வேலை கேட்டு வந்த தவெக பெண்மணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஶ்ரீவைகுண்டம் #சரவணன் MLA , நாகை தவெக மாவட்ட நிர்வாகி #பூபாலன் ரூபாய் 1000 கோடிக்கு மெத்தம்பெட்டமைன் தயாரித்து வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி இத்தனை குற்றங்களுக்கும் முதல்வரும், தமிழக காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காப்பாற்றிய ஆட்சியை பாராட்டாமல் இருக்க முடியுமா ? அதற்காக தான் இன்று சென்னையிலே மேற்படி சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடத்த போகிறீர்களா CM sir?" எனக் கேள்வி எழுப்பினார்.

இப்படி லிஸ்ட் போட்டு தாக்கும் அளவுக்கு அவப் பெயர் சேர்ந்துள்ளதால், இன்று முதலமைச்சர் அனைத்து MLAகளுக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுக்கவுள்ளார்.

வெளியே தெரிந்தது மட்டுமல்லாமல், தெரியாமல் பல கிசுகிசுக்கள் முதல்வரின் காதுகளுக்குச் சென்றுள்ளன. ஏற்கெனவே இதேப்போல உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்தபோது அமைச்சரவையில் மாற்றம் ஏற்படப் போவதாக பேச்சுகள் எழுந்தது.

அதன்பிறகான அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் லஞ்சம் பெறுவது குறித்து அமைச்சர்களை கடுமையாக எச்சரித்ததாக தெரிவித்தனர். இந்தமுறை வெறும் எச்சரிக்கையுடன் இல்லாமல் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்துவிட்டாராம்.

குறிப்பாக துணை சபாநாயகரின் பொறுப்பை பறித்து, கருப்பையாக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் விசாரணை குழு அமைக்க இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதனால் யார் யார் மீது என்ன மாதிரியான கேள்விகள் பாயும் என கலக்கத்தில் உள்ளனர் சட்டமன்ற உறுப்பினர்கள்.

TVK MLAs in High Anxiety as Chief Minister Vijay Prepares to Lash Out!
`ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்' "தவெக MLA-வை கைது செய்ய முதல்வருக்கு பயமா.." - EPS வலியுறுத்தல்.. MLA அருள் விக்னேஷ் சொன்ன பதில் என்ன?
TVK MLAs in High Anxiety as Chief Minister Vijay Prepares to Lash Out!
``கோபம் அவர் மீதா?.. முதலமைச்சர் விஜய் மீதா?" சாமானியரை தாக்கிய தவெக MLA.. டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!
TVK MLAs in High Anxiety as Chief Minister Vijay Prepares to Lash Out!
"கேமராக்களுக்கு ஆக்‌ஷன் செய்வதில் ஆர்வம்.. புத்தகங்களை சரிபார்க்க வேண்டாமா.. " - தவெக குறைகளை அடுக்கிய EPS!
TVK MLAs in High Anxiety as Chief Minister Vijay Prepares to Lash Out!
"இந்தியர்கள் அனைவருக்குமான பேரிழப்பு" கூட்டணி கட்சியின் எதிர்ப்பும் தவெக அமைச்சர் விளக்கமும்.. குரியன் ஜோசப் குழு கலைக்கப்பட்டது ஏன்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.