வாக்களித்த உடன் திமுக வேட்பாளர் சுகன்யா கொடுத்த பேட்டி.. ‘முதல்வர் விஜய் ரோடு ஷோ செய்ததே வெற்றி’ என பேச்சு!

3 மாதங்களில் தவெக சார்பில் மக்களுக்காக எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை...
Suganya Dharapuram Election
Suganya Dharapuram Election
Published on: 
Updated on: 
1 min read

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுகன்யா, இன்று காலை முதல் ஆளாக சென்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாராபுரத்தில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், முதல் வாக்காளர்களில் ஒருவராக சுகன்யா தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று முதல் ஓட்டை போட்டுவிட்டேன். வெற்றிகரமாக தொடங்கி வைத்திருக்கிறேன். வெற்றி நிச்சயம்” என தெரிவித்தார்.

மேலும், வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருப்பதாக கூறிய அவர், தாராபுரத்தில் திமுகவின் வெற்றி சவாலாக இருக்காது என நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 3 மாதங்களில் மக்கள் சந்தித்த ஏமாற்றங்களால், அவர்கள் மாற்றத்தை எதிர்பார்த்து திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என சுகன்யா கூறினார். தாராபுரத்தில் திமுக வெற்றிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பொறுப்பாளர்கள் முழு அளவில் உழைத்துள்ளதாகவும், கடந்த 3 மாதங்களில் தவெக சார்பில் மக்களுக்காக எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

Suganya Dharapuram Election
Suganya Dharapuram Election

2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது முதல் 100 நாட்களில் செய்யப்பட்ட சாதனைகளையும், தவெக ஆட்சியின் 100 நாள் செயல்பாடுகளையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என சுகன்யா தெரிவித்தார். தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் சத்தியபாமா குறித்து பேசிய சுகன்யா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் தவெகவில் இணைந்திருப்பதாகவும், அவரை மக்கள் புறக்கணித்ததை சமூக வலைதளங்களில் அனைவரும் பார்த்திருப்பார்கள் என்றும் கூறினார்.

தவெக தலைவர் விஜய் தாராபுரத்தில் ரோடு ஷோ நடத்தியதை குறிப்பிட்ட சுகன்யா, “முதல்வர் விஜய் வந்து ரோடு ஷோ செய்ததே எங்களுக்கு கிடைத்த வெற்றிதான்” என தெரிவித்தார். தன்னை ஆதரித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் பிரசாரம் செய்து திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு கேட்டதாகவும், ஆனால் விஜய் அது போல செய்யாமல் ரோடு ஷோ நடத்திவிட்டு சென்றதாகவும் சுகன்யா விமர்சித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com