

தமிழக வெற்றிக் கழக அமைச்சர் CTR நிர்மல் குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தவெக வேட்பாளர்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக வெளியான செய்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “எங்கள் வேட்பாளர்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை.
எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, அம்மா 30 ஆண்டுகள் உழைப்பைக் கொடுத்துக் காப்பாற்றிய கட்சி. இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி தன் சுயநலத்திற்காக, நாங்கள் திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்று சொன்னால், யார் ஒத்துக்கொள்வார்கள்?
மக்கள் தவெகவுக்கு வாக்களித்திருக்கும்போது, தவெகவும் அதிமுகவும் திருட்டுக் கூட்டணி போட்டால், மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எம்.ஜி.ஆரைப் பார்த்து, அம்மாவைப் பார்த்து அந்தக் கட்சியில் இருந்தவர்கள் எப்படி எடப்பாடி பழனிசாமியோடு பயணிப்பார்கள்?
இன்னைக்கு மிசா விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு முட்டுக்கொடுக்கிறார். திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படும் அந்தக் கட்சியில், புரட்சித்தலைவருக்கும் அம்மா அவர்களுக்கும் விசுவாசமாக இருக்கும் யாரும் பயணிப்பார்கள் எனச் சொல்ல முடியாது.
எப்படி திமுகவுடன் சேர்ந்து செயல்படுவதற்குப் பதில், மக்கள் யாருக்கு ஆதரவு அளித்தார்களோ அவர்களுடன் சேர்ந்து செயல்படலாம் என ராஜினாமா செய்துவிட்டு வருவதில் எந்தத் தவறும் இல்லை. வேட்பாளர்கள் களத்திற்குப் போகும்போது திமுகவும் அதிமுகவும் ஆள் வைத்து, சில வேலைகளைச் செய்கின்றனர்.
முதலில் இருவரும் இணைந்து ஒரு வேட்பாளரைப் போட்டியிட வைப்பதுதான் திட்டமாக இருந்தது. அப்படி செய்தால் வாக்குகளைப் பிரிக்க முடியாது என்பதால், தனித்தனி வேட்பாளர்களைப் போட்டிருக்கிறார்கள்.
ஆனால், களத்தில் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. 70% மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் எனத் தெளிவாக இருக்கிறது. எடப்பாடியின் துரோகத்தைப் பார்க்க முடியாதவர்கள் எங்கள் கட்சியின் வேட்பாளர்களாக உள்ளனர். நிச்சயம் வெற்றி பெறுவார்கள்” எனப் பேசினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்