“தமிழ்நாட்டை திமுக தான் ஆள்கிறது” - ‘பராசக்தி’ ஸ்டைலில் சரமாரி கேள்விகளால் துளைத்த ஸ்டாலின்! எந்த வேலையும் செய்யாமல் வெற்றியா..?

வாக்களர்களை சந்திக்காமல், வேட்பாளர்களை நியமிக்காமல் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்
MK stalin
Published on
Updated on
2 min read

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்கு தஞ்சாவூர் வந்திருந்தார். விழாவில் பங்கேற்ற பின் உரையாற்றிய ஸ்டாலின் ஆளும் தவெக அரசை விமர்சித்தும்  திமுக தொண்டர்களுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் உரையாற்றினார்.

அப்போது “நாம் அனைவரும் பணிகளை செய்து தோற்றோம் அவர்கள் எந்த பணிகளையும் செய்யாமல் வெற்றிருக்கிறார்கள்” என்றும் “வாக்களர்களை சந்திக்காமல், வேட்பாளர்களை நியமிக்காமல் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்” என்றும் ஆளும் அரசை விமர்சித்தார். “ஏதோ நாம் தோற்று விட்ட மாதிரி, படுதோல்வி அடைந்து விட்ட மாதிரி, இத்துடன் திமுக கதை முடிந்துவிட்டது என்று கருதுகிறார்கள், ஆனால் தோல்வி நேரத்தில் தான் திமுக ஒரு பீனிக்ஸ் பறவை போல நிமிர்ந்து எழும்” என்று திமுக தொடர்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார். 

திமுகவிற்கு வாக்களித்த மற்றும் திமுக உறுப்பினர்களை  நோக்கி “யாரும் சோகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார். “திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இருக்கும் வரை, தமிழ் நாட்டை ஆள்வது திராவிட மாடல் ஆட்சி தான்”  என்றும் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். சமீபத்தில் முதல்வர் விஜய், தனது வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்த 2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்படாமல், முன்னாள் அரசு வழங்கிய 1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழக்கம் போல் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதையடுத்து அந்த தொகை வரவும் வைக்கப்பட்டது, இதுவும் மு க ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையின் பின்பே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னாள் அரசு அறிவித்த மக்கள் நல திட்டங்கள் தொடரும் என்று தற்போதைய தவெக அரசு தெரிவித்திருந்தது. இதை மேன்மைகொள் கட்டியே பேசியுள்ளார் ஸ்டாலின்.

அதை தொடர்ந்து பேசிய அவர் “வெற்றி தோல்வியை சமமாக கருதி உழைத்து கொண்டிருக்கும் இயக்கம் தான் திமுக, அது பல தோல்விகளையும் கண்டுள்ளது வெற்றிகளையும் கண்டுள்ளது, தற்போது உள்ள ஆட்சி திமுக கொண்டு வந்த திட்டங்களை தான் செயல்படுத்தி வருகிறது, அதுவரை திமுக தான் தமிழ்நாட்டை அளிக்கிறது என்று பொருள்” என குறிப்பிட்டிருந்தார். மேலும் தேர்தல் தோல்வி குறித்து பேசிய அவர், நாம் ஏன் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம், நம்மிடத்தில் என்ன குறை, எந்த துறையில் தவறிவிட்டோம், மக்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பது குறித்து ஆராய தனி குழு அமைக்கப்படும் என்றும் மக்கள் தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டார். உடன்பிறப்பே வா எனும் இணைய தளம் உருவாக்கப்படுள்ளதாகவும், அதில் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்” என்றும் தெரிவித்தார்.

இறுதியாக தவெக ஆட்சி அமைத்தததிற்கு காரணம் சமூக வலைதளத்தின் செய்யப்பாடு தான் என்றும் குழந்தைகளை வைத்து அரசியல் செய்து வென்றுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com