

திமுக சார்பில் போட்டியிடும் 164 வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டர் முதல்வர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உரையாற்றினார். மேலும் நாளை தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்படும் எனவும் அறிவித்தார்.
இதில் 60 க்கு மேற்பட்ட புதுமுக வேட்பாளர்களை களமிறக்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் 18 பெண்கள், முனைவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பட்டம் பெற்றவரகள் என்று அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்புகளை வழங்கியுள்ளதாக தெரிகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணி கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிடுகின்றன மேலும் அதன் தொகுதி பட்டியலை நேற்று வெளியிட்டு இருந்தது. அதையடுத்து திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார் மு.க ஸ்டாலின்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றியை பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்மையில் திமுகவில் இணைத்த ஓ பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவித்துள்ளார். அதையடுத்து திமுகாவை சேர்ந்த பொன்முடி க்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை, அதற்கு மாற்றாக அவர் மகன் கவுதம் சிகாமணிக்கு திருக்கோவிலூர் தொகுதி ஒதுக்கபட்டுள்ளது. சட்ட மன்ற தேர்தலை வேட்பாளர்களாக சந்திக்க பெரும்பாலான திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், பட்டதாரி இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று புதிய நீதி கட்சி சார்பில் நடிகர் சுந்தர் சி இரட்டை இலையில் போட்டி இடுவதாக அறிவித்திருந்தனர். அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வேட்பாளரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் திமுக காசி போட்டி இடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் போட்டியிடுவதாக சொல்ல பட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் முனைவர் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். தற்போது பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுக சார்பில் ஆர்.டி.சேகர் போட்டியிடுகிறார். முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த கே.பி ராஜன் போட்டிஇடுகிறார்.
திமுகவில் முக்கிய அங்கமாக இருந்த சிலரின் பேர் பட்டியலில் இடம் பெறவில்லை. அவர்களின் மீதான சில விமர்சனத்தின் காரணமாக இந்த முடிவு என தெரிகிறது. ஆனாலும் வரும் தலைமுறையினருக்கும் படித்த பட்டதாரிகள் மற்றும் பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ள இந்த நகர்வு வரவேற்கத்தக்கது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.