“திமுக -வின் எதிர்ப்பு எவரொருவரையும் வளர்க்கும்” -கட்டுப்பாடுகளை கடந்து வெல்லும் விஜய்!?? - பத்திரிகையாளர் மணி சொல்லுவது என்ன!?

விஜய் -ன் முதல் மக்கள் சந்திப்பு திருச்சியிலிருந்து துவங்குகிறது. அதன்படி திருச்சி மரக்கடை ...
vijay
vijay
Published on
Updated on
2 min read

தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் இதுவரை காணாத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த தேர்தலின் தனித்துவத்தை உறுதி செய்தவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான். இதுவரை அதிமுக - திமுக என்ற இரண்டு பிராந்திய கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த நிலை சற்று மாறியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சி துவங்கிய விஜய் திமுக -எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியிலிருந்து தனது அரசியலை முன்னெடுத்தார். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது பல கட்ட விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவர் அனைத்தையும் கடந்து 2 மாநில மாநாடுகளை நடத்தி முடித்திருக்கிறார்.

விக்ரவாண்டியில் நடத்தப்பட்ட வி சாலை மாநாடும் சரி, மதுரை பாரபத்தி மாநாடும் சரி மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபித்தன.

விமர்சனமும் பதிலும்..

தமிழக வெற்றி கழகம் மீது இரண்டு மிக முக்கியமான விமர்சனங்கள் இருக்கின்றன. வேறு சில விமர்சனமும் உள்ளன. ஆனால் அவை எல்லா காட்சிகளிலும் உள்ள பொதுவான விமர்சனம்தான் ஆனால் 

1.விஜய் மக்களை நேரடியாக சந்திக்கவில்லை…களத்தில் நிற்கவில்லை 

2. விஜய் கட்சியின் தொண்டர்கள் பக்குவப்படாமல், அரசியல்படுத்தப்படாமல் இருக்கின்றனர் 

ஆகிய இரு விமர்சனங்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. ஆனால் அந்த விமர்சனங்களை எல்லாம் விஜய் எப்படி கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன் விளைவாகத்தான் விஜய் மக்கள் சந்திப்பை முன்னெடுத்திருக்கிறார்.

ஆனால் இரண்டாவது விமர்சனம் ஒரு நாளில் சரியாகும் ஒன்று அல்ல.. அவரின் ரசிகர்கள் நம்பிக்கைக்குரிய தவெக தொண்டர்களாக மாற நீண்ட நாட்கள் ஆகும்.

 கடைசியாக மதுரை மாநாட்டில் பேசும்போது கூட ‘நான் மக்களை விரைவில் சந்திக்க உள்ளேன்’ என சொல்லியிருந்தார் அதன்படியே இன்று முதல் ‘வெற்றி பேரணியில் தமிழ்நாடு’ என்ற பொருண்மையில் விஜய் -ன் முதல் மக்கள் சந்திப்பு திருச்சியிலிருந்து துவங்குகிறது. அதன்படி திருச்சி மரக்கடை காந்தி சந்தை பகுதியிலிருந்து தனது பிரச்சாரத்தை விஜய் துவங்குகிறார்.

ஆனால் விஜய் -ன் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி வழங்குவதில் பல கெடுபிடிகளை வித்தது.. அதுமட்டுமன்றி விஜய் தங்குவதற்கு கூட திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதிகளில் அறை ஒதுக்குவதில் சிக்கல் எழுந்ததாக சொல்லப்பட்டது.

விஜய் வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும், கூட்டம் கூடும் என்று சொல்லப்பட்டாலும் அதற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

23 நிபந்தனைகள் 

விஜய் 30 நிமிடம் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 10:30 மணியில் இருந்து 11 மணி வரை மட்டுமே அவர் அந்த இடத்தில் பேச முடியும்.

காலை 9:30 மணி அளவில் மரக்கடை பகுதிக்கு தொண்டர்களை வரவழைத்திருக்க வேண்டும். ரோடு ஷோ நடத்தக்கூடாது. விஜய் வரும்போது அவருடைய வாகனத்துக்கு முன்பும்  பின்பும்  5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி . வேறு வாகனங்கள் வந்தால் அனுமதி மறுக்கப்படும். மருத்துவ வசதி ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்கள் அனைத்தும் தமிழக வெற்றிக்கழகத்தினர் செய்து கொள்ள வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரக்கூடாது.

 பொதுமக்கள் யாருக்கும் போக்குவரத்தில் இடையூறு செய்யக்கூடாது. கூம்பு வடிவ ஸ்பீக்கர்களை வைக்கக்கூடாது. தவெக  தொண்டர்கள் மிக நீளமான குச்சி கொடி எடுத்து வரக்கூடாது. பள்ளிக்கு செல்பவர்கள், விமான நிலையம் செல்பவர்கள், மருத்துவமனை செல்பவர்களுக்கு, வழி விட வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பவை  உள்ளிட்ட 23 நிபந்தனைகளை திருச்சி மாநகர காவல் துறையினர் விதித்துள்ளது.

இதுகுறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மணி பேசுகையில், “இது அப்பட்டமான அடக்குமுறை. திமுக பயந்துவிட்டது. ஏற்கனவே பல நாட்களாக எடப்பாடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.ஆனால்  அதற்கெல்லாம் அவர்கள் இத்தகு கெடுபிடியை விதிக்காமல் விஜய் –க்கு மட்டும் வித்திருப்பது திமுக -வின் பயத்தை மீண்டும் மீண்டும் ஊர்ஜிதம் செய்கிறது. 30 நிமிடங்கள் மட்டுமே ஒரு அரசியல் தலைவர் எப்படி பேச முடியும். அதற்கு அனுமதி இல்லை என்றே சொல்லியிருக்கலாமே. திமுக -வின் எதிர்ப்பு எவர் ஒருவரையும் வளர்க்கும்’ இந்தியா நான் சொல்லல, “சோ ராமசாமி” சொன்னது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா -வை வளர்த்த அதே திமுக -வெறுப்பு நிச்சயம் விஜய் -யையும் வளர்க்கும். ஆனால் அதற்கு விஜய் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தனக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறையை ஒரு அரசியல் தலைவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார். பொறுத்திருந்து பாப்போம், என்ன பேசுகிறார் என்று” என பேசியிருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com