
தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் இதுவரை காணாத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த தேர்தலின் தனித்துவத்தை உறுதி செய்தவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான். இதுவரை அதிமுக - திமுக என்ற இரண்டு பிராந்திய கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த நிலை சற்று மாறியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சி துவங்கிய விஜய் திமுக -எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியிலிருந்து தனது அரசியலை முன்னெடுத்தார். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது பல கட்ட விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவர் அனைத்தையும் கடந்து 2 மாநில மாநாடுகளை நடத்தி முடித்திருக்கிறார். கடந்த இரண்டு வாரங்களாக மக்களையும் சந்தித்து வருகிறார் விஜய்.
ஆனால் அவர் கிடைக்கும் இடங்களில் எல்லாம் பேசுவது வெறும் திமுக எதிர்ப்புதான், அவர் பாஜக, அதிமுக -ஆகிய கட்சிகளை விமர்சித்தாலும் திமுக அளவிற்கு அவர் யாரையும் சாடியதில்லை. முன்னதாக நடந்த விக்கிரவாண்டி மாநாட்டில், மன்னராட்சி, ஊழலில் திளைத்த கட்சி என காத்திரமாக விமர்சித்திருந்தார்,
அதற்கு அடுத்து வந்த, மதுரை மாநாட்டில் “stalin Uncle” கேக்குதா? என பேசி மு.க.ஸ்டாலின் உருவாக்கி வைத்திருந்த “அப்பா” இமேஜை உடைத்துவிட்டிருந்தார். இப்படி தொடர்ச்சியாக விஜய் கால் வைக்கும் இடங்களில் எல்லாம் திமுக -விற்கு எதிரான விமர்சனங்களையே முன்னெடுத்து வருகிறார்.
அதிலும் கடந்த நாகப்பட்டினம் - திருவாரூர் பரப்புரையின்போது அவர் பேசிய கருத்துக்கள் மேலும் வைரலாகின. விஜய்யின் இந்த அதிரடிப் பேச்சு, தமிழக அரசியலில் சில முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
திமுக -வின் ரியாக்ஷன்
விஜய் இவ்வளவு சாதியும் திமுக அதற்கு பெருமளவில் சொல்லால் பதிலளிக்கவில்லை. அவர்கள் விஜய் -யை பற்றி பேசி அவரை வளர்த்துவிட்ட வேண்டாம் என்று நினைப்பதாக கூட சில அரசியல் விமர்சகர்கள் பேசியிருந்தனர். சமீபத்தில் கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி சென்று வந்த பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தவெக தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்து கருத்து கூறுங்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. “அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, நான் பொதுவாக அதிகம் பேசமாட்டேன், பேச்சை விட்டு செயலில் அனைத்தும் இருக்கும்” என்று பேசியிருந்தார். மேலும் மிக தெளிவாக திமுக பிரமுகர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லி உள்ளார். விஜய் எவ்வளவு பேசினாலும் எந்த விதமான பதில் வினையும் நாம் ஆற்றக்கூடாது என்பதுதான் அது. ‘விஜய் என்ன பேசினாலும் பேசிக்கொள்ளட்டும். நீங்கள் யாரும் கண்டுகொள்ளாதீர்கள்’ என சொல்லியதாக தெரிகிறது.
விஜய் -க்கு வந்த எச்சரிக்கை
இந்த செய்தி விஜய் தரப்பு நிர்வாகிகளுக்க எப்படியோ தெரிய வந்துள்ளது. இந்த செய்தி வந்ததிலிருந்து தவெக -வின் நிர்வாகிகள், மிக முக்கியமான ஒரு ஆலோசனையை விஜய் -க்கு வழங்கியுள்ளனர். “இனி வரும் பரப்புரைகளில் நாம் திமுக -வை இன்னும் தீவிரமாக தாக்க வேண்டும். பாரபட்சமின்றி நாம் திமுக -வை விமர்சித்தால் மட்டுமே, அவர்கள் ஏதேனும் எதிர்வினையாற்றுவார்கள். அவர்களின் அந்த எதிர்வினைதான் நமக்கான அரசியல் களம்” என நிர்வாகிகள் அறிவுறுத்தியதாகவும், அடுத்த பரப்புரைக்கு விஜய் மிக மிக ஆவலாக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.