திமுக, மற்றும் பிற கட்சியை தோலுரித்துக் காட்டுகிறாரா விஜய்? 'ரஜினி' ஸ்டைலில் திமுகவிற்கு முடிவு சொல்லி மாஸ்!

தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்.
இறுதிநாள் பரப்புரையில் விஜய்
இறுதிநாள் பரப்புரையில் விஜய் இறுதிநாள் பரப்புரையில் விஜய்
Published on
Updated on
4 min read

இன்றுடன் (21ம் தேதி) தமிழ்நாட்டின் தேர்தல் பரப்புரை நிறைவடைவதால் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் தங்களது பிரச்சாரத்தை விறுவிறுப்புடன் செய்து வருகின்றனர். மேலும் 23ம் தேதி தேர்தல் என்பதால் இன்றுடன் இந்த தேர்தல் பரப்புரை நிறைவடையும் நிலையில் தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பினை சென்னையில் மேற்கொண்டார்.

அதில் பேசிய விஜய், "திமுக ஆட்சியை, ஸ்டாலின் சாரை , மக்களை முழுவதுமாக கண்டுகொள்ளாமல் இருந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப்போகிற தேர்தலின் கடைசி பிரச்சாரம். மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு தன்னுடைய வாழ்க்கையை நன்றாக உயர்த்தியுள்ளார். மக்களுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி, தொழில் வரி, விலைவாசி உயர்வு, குப்பைக்கு வரி என்று மக்களின் கஷ்டங்களை மட்டுமே உயர்த்தியுள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் வாங்காத அளவாக கடனையும் உயர்த்தி வைத்துள்ளார். ஐந்தாயிரம் லட்சம் கோடி வாங்கிய கடன் மூலமாக மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்திருக்கலாம். இளைஞர்களின் கல்வி கடனை ரத்து செய்திருக்கலாம்" என்று தவெக கட்சி தலைவர் விஜய் கூறினார்.

மேலும்,"விக்கிரவாண்டி மாநாட்டில் நான் கூறியது போன்று நமது அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக, அந்த நிலைப்பாட்டில் இருந்து நாம் மாறவே இல்லை. இங்கு இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் அவர்களின் வழிபட்டு முறைகளில் மட்டும்தான் வேறுபடுவார்கள். ஆனால் தமிழ்நாடு என்று வந்துவிட்டால், ஒற்றுமையை காக்கவேண்டும் என்று வந்துவிட்டால் நம் நல்லிணக்கத்தை யாரும் குலைக்கமுடியாது என்ற நிலைப்பாட்டில் இருந்து நாம் மாறினோமா?. ஒரு 'இன்ச்' கூட மாறவே இல்லையே. மதசார்பற்ற கொள்கைதானே நமது கொள்கை, அதிலிருந்து நாம் மாறவே போவது இல்லை. இதில் 100% உங்கள் விஜயை இந்த விஷயத்தில் நீங்கள் நம்பலாம்". மேலும் அவர், "சிங்கம் தனியா வந்தாலும் தண்ணி காட்டிவிடும் என்று கூறியது ஒரு நம்பிக்கையில் மட்டும் கூறியது இல்லை. உலகம் முழுக்க நமக்கு இருக்கும் அந்த வகையறாக்கள் கொடுத்த நம்பிக்கை" என்று மக்களை பார்த்து கூறினார்.

தான் 'ஸ்டாலின் சார்' போன்று இல்லை என்றும் சொன்ன சொல்லை காப்பாற்றுவேன் என்றும் மக்கள் மத்தியில் விஜய் கூறினார். சிறுபான்மை மக்களின் வாக்கிற்காக கோடிக்கணக்கான பணத்தின் மூலம் காங்கிரஸை தன் பக்கம் வைத்துள்ளதாகவும் கட்சியை காப்பாற்ற மறைமுக கூட்டணியாக பாஜக-வோடு இருப்பதாகவும், ஒரு பக்கம் கதர் வேடம், ஒரு பக்கம் கவி வேடம் போடுவதாகவும் விஜய் குற்றம் சாட்டினார். ஒன்றரை வருடங்களுக்கு தான் கூறியது இப்போ இந்தியா முழுக்க ஒலிப்பதாகவும், மேற்கு வங்க முதல்வர் மம்தா இதைத்தான் கூறுவதாகவும், இதற்கு ஸ்டாலின் சார் என்ன பதில் கூறப்போகிறார்? என்றும். இந்த தேர்தலில் திமுக தோற்கப்போவது உறுதி என்றும் அவர் மக்கள் மத்தியில் உரக்க பேசினார்.

"தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் கட்சியை காப்பாற்றிக்கொள்ள ஸ்டாலின் சார் என்ன என்ன செய்வர்? என்று கூறுகிறேன். வழக்குகள் இருக்கிறதல்லவா? லஞ்சம் வழக்கு, ஊழல் வழக்கு, திருட்டு வழக்கு, அமைச்சர்கள் மீதும், அவரின் குடும்பத்தினர் மீதும் இருக்கும் வழக்குகளில் இருந்து கைபற்றிக்கொள்ள மோடி மற்றும் அமித் ஷா காலில் கண்டிப்பாக விழுவார். அன்று அவர்களின் மொத்த சாயமும் வெளுக்கும்" என்று பேசினார். பாஜக-விற்கு முதல் அடிமை யார்? என்பது குறித்து திமுக-விற்கு மற்றும் பலர் கட்சிக்கும் போட்டிநிலவுவதாக விஜய் குற்றம் சாட்டினார். மேலும், சிறுபான்மையினருடன் தான் கண்டிப்பாக உடன் நிற்பதாக வாக்குறுதி அளித்தார். கருத்து கணிப்பு என்ற பெயரில் 'கடுப்பில் வெளிட்ட கணிப்பில்' திமுகவும், மற்றும் பலர் கட்சினரும் தங்கள் இஷ்டத்திற்கு இத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறிவருகிறார்கள். 40 வயதிற்குட்பட்டோர் மட்டுமே விஜய்க்கு வாக்களிப்பர் என்றும் அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாகவும், 50 வயதிற்கு மேற்பட்டோர் விஜய்க்கு போனால் போகட்டும் என்று வாக்களிப்பர், ஆனால் அவர்களின் எண்ணிக்கை அதிகம்" என்றும் கூறுவதாக அவர் கூறினார். மேலும், தேர்தல் ஆணையம் வெளிட்ட அறிக்கையில், 40 வயதிற்குட்பட்டோர் 2 கோடியே 37க்கும் மேற்பட்டோர், தில் 50 வயதிற்குள் இருபவர்களி சேர்த்துக்கொண்டால் 3 கோடியே 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர், இதில் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் மட்டுமே 1 கோடியே 77 லட்சத்திற்கும் மேற்பட்டோர் என்றார். 60 வயதிற்கும் மேற்பட்டோர் கூட நமது விஜய், நமது விஜி என்றுதான் கூறுவதாக விஜய் கூறினார். திமுகவின் ஆட்சி கனவு கொள்ளை அடிக்கும் கனவு எல்லாம் 'கதம் கதம்'என்று ரஜினி ஸ்டைலில் மக்களிடம் கூறினார் விஜய்.

மக்களிடம் கைகூப்பிய விஜய், தேர்தல் நாள் அன்று பூத்திற்கு சென்று ஸ்டாலின் சாரிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியே ஆகவேண்டும், ஜனநாயகத்தை காப்பாற்றவேண்டும், என்ன வேலை இருந்தாலும் உங்களுடைய பூத்திற்கு சென்று 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும், வெளிநாட்டில் இருந்து பணம் செலவழித்து வாக்களிப்பதற்காக இங்க வந்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்தார். தொடர்ந்த பேசிய அவர், 10 முறை தோற்றுப்போன மற்றும் பிற கட்சிக்காரர் விஜய் வெளியவே வரமாட்டார் என்று கூறுவதாகவும் அவரை சேலத்திற்கு அருகில் இருக்கும் தொகுதியில் மட்டும் சென்று பதுங்கிக்கொள்ளாமல் தமிழ்நாட்டில் வேறு ஏதேனும் ஒரு தொகுதியில் நின்று அவர்கள் வெல்லமுடியுமா? என்று கேள்வியை எழுப்பினார். மேலும், எடப்பாடி தொகுதியில் இருக்கும் தொகுதி மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். 'விசில்' சின்னத்தை மற்றும் பிற கட்சி திருடியதாகவும் அதனால் 'டிவி' சின்னத்திற்கு வாக்களிப்பது என்பது 'விசில்' சின்னத்திற்கே வாக்களிப்பதற்கு சமம் என்று அவர் கூறினார். நல்லாட்சி, மாற்றத்திற்கான ஆட்சியை அமைக்க நாம் தவெக-வை கொண்டுவருவோம் என்றும் அவர் பேசினார். "போகி அன்று வீட்டில் உள்ள பழைய பொருளை எரிப்பது போன்று இந்த 75 ஆண்டு கால பவளவிழா பாப்பாவையும், 55 வருட பல்லாங்குழி பாப்பாவையும் தூக்கி வீசி எறிவோம் ஒரு புது ஆட்சியை கொண்டுவருவோம், திமுக அல்லது அதிமுக என்று யாருக்கு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு ஓட்டுபோடுவதற்கு சமம்தான்" என்று பேசினார். இவர்கள் ஒட்டுமொத்தமாக நின்று ஒருவரை (விஜய்) எதிர்ப்பதற்கான காரணம் அவர்கள் எல்லாம் ஒரு அணி ஒரே கூட்டணியில் இருப்பதே என்று அவர் பகிரங்க குற்றச்சாட்டினை வைத்தார். "மக்களுக்காக அரசியலுக்கு வந்தது தவறா? மக்களுக்கு நல்லாட்சி தர நினைத்தது தவறா? ஊழல் செய்யக்கூடாது என்று நினைத்தது தவறா? லஞ்சம் வாங்கக்கூடாது என்று நினைத்தது தவறா? பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யநினைப்பது தவறா? போதை கலாச்சாரத்தை ஒழிக்க நினைத்தது தவறா? சட்ட ஒழுங்கை சரி செய்ய நினைப்பது தவறா? விவசாயிகள், மீனவர்களுக்காக வந்தது தவறா?" என்று ஆக்ரோஷமாக பேசினார். மேலும், "வீட்டில் இருக்கக்கூடிய குட்டி குழந்தைகள் அனைவரும் உங்களுக்கு பிடித்த மிட்டாய் வேண்டும் என்றல் அழுது அடம்பிடித்து வென்று விடுவது போல் 'உங்கள் விஜய் மாமா'விற்காக உங்கள் வீட்டில் ஓட்டு போடும் வயதில் உள்ளவர்களிடம் 'விசில்' சின்னத்திற்கு ஓட்டு போட சொல்லுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார்."பாஜகவை வைத்து பூச்சாண்டி காட்டுகிறார்கள் அது மக்களிடம் எடுபடாது" என்றும் அவர் பேசினார். மக்கள் ஏற்கனவே முடிவெடுத்து விட்டார்கள், அதனால் இந்த கருத்துக்கணிப்புகள் எதையும் நம்பாதீர்கள். ஸ்டாலின் சார் தேர்தலில் தோற்றபின்பு, இந்த விஜயை ஏன் பகைத்துக்கொண்டோம்? என்று நினைத்து நினைத்து ஃபீல் செய்யப்போவதாக அவர் கூறினார். இதனையடுத்து கரூர் விவகாரம் குறித்து பேசியதில், "கரூர் விவகாரத்தில் அந்த மக்களை கேட்டால் அவர்களே கூறிவிடுவார்கள். ஏன் என் மீது பழிபோடுகிறீர்கள்? இந்த விவகாரம் குறித்து அரசியல் செய்யப்போவதில்லை என்று காணொளி வெளியிட்டுவிட்டு சட்டசபையில், என் மீது தாமதமாக வந்துவிட்டார் என்று பழிபோட்டு பேசுகிறீர்கள். போலீசார் கொடுத்த நேரத்தில் நான் அங்கு இருந்தேன். நாமக்கல்லில் இருந்து கரூர் வரை நான் எவ்வாறு வந்தேன் என்று ஒட்டுமொத்த மக்களும் நேரலையில் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்றால், 20 வருடமாக கரூரில் நின்ற உங்கள் அடிமையை கோயம்பத்தூர் வரை ஓடவைத்தது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், மக்களிடத்தில் "உங்களுக்காக நீதி கேட்டு வந்த எனக்கு நீங்கள் நீதி வழங்க வேண்டும். அதை உங்கள் ஓட்டின் வாயிலாக செலுத்துங்கள்" என்று கேட்டுக்கொண்டு தனது இறுதி நாள் பரப்புரையை நிறைவு செய்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com