நடுத்தர மக்களும் “beach wedding” பிளான் பண்ணலாம்” - தமிழக சுற்றுலா துறை வெளியிட்ட அறிவிப்பு.. கனவு கல்யாணம் இனி உங்கள் பட்ஜெட்டில்

பத்தாயிரம் ரூபாய் இருந்தால் போதும். கடற்கரையில் திருமணத்தை நடத்த அனுமதி பெறலாம் என தமிழக அரசின் புதிய திட்டம்..
நடுத்தர மக்களும் “beach wedding” பிளான் பண்ணலாம்” - தமிழக சுற்றுலா துறை வெளியிட்ட அறிவிப்பு.. கனவு கல்யாணம் இனி உங்கள் பட்ஜெட்டில்
Published on
Updated on
2 min read

வசதி படைத்தவர்கள் மட்டுமே கடற்கரைகளில் திருமணங்கள் நடத்தும் நிலை உள்ளது என்றும் அவை ஆடம்பரமானவை  என்றும் கருதப்படுகிறது. நெடுங்காலமாக சாமானியர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும்  கடற்கரைத் திருமணம் என்பது வெறும் கனவாகவே இருந்தது. தற்போது அது சாதாரண மக்களுக்குமானது என மாறியுள்ளது.

மற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் திருமணம் என்பது இந்தியாவில் பெரும் செலவாக இருக்கும். ஒரு திருமணத்திற்கான செலவு என்பது கிட்ட தட்ட ஒருவரின் மொத்த சேமிப்பாக கூட இருக்கலாம். ஆனால் அதுவே இங்கு பழக்க பட்ட நிலையில் அனைவரும் அதற்கு முக்கியத்துவம் அளித்து எல்லா சேமிப்புகளையும் போட்டு மேலும் கடன்களையும் வாங்கி திருமணத்தை நடத்துகின்றனர். இன்னும் ஒரு படி மேலே சென்று வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ள Wedding Loan எனும் EMI யிலும் மாட்டி கொள்கிறார்கள். இதனால் பெரும் பொருளாதார சிக்கலில் குடும்பம் மற்றும் அந்த திருமண தம்பதியும் சிக்கி கொள்கிறார்கள்.அதை தீர்க்கும் பொருட்டே அவர்கள் வாழ்க்கை ஓட வேண்டி இருக்கும். மேலும் வெளிநாடுகளில் வழக்கத்தில் இருந்த பீச் வெட்டிங் தற்போது  இந்தியாவிலும் நடக்க தொடங்கியது. இப்போது உள்ள இளைஞர்களிடையே அது வரவேற்பை பெற்றுள்ளது மேலும் பலரின் கனவாக உள்ளது.

தற்போது தமிழக சுற்றுலாத்துறை அறிமுகப்படுத்தும் இந்தத் திட்டத்தின்படி நடுத்தர வர்க்கத்தினரும் கடற்கரையில் திருமணத்தை நடத்திக் கொள்ள முடியும் என தெரிகிறது. இது பல நடுத்தர குடும்பத்தின் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் அறிவிப்பாக இருக்கும் எனலாம். தமிழக அரசின் சுற்றுலா மற்றும் வளர்ச்சி கழகம் முன்னெடுத்துள்ள இத்திட்டத்தின் படி கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றுலா வளர்ச்சி கழக அனுமதியுடன் இனி திருமண நிகழ்ச்சிகளை நடத்த முடியும். பத்தாயிரம் ரூபாய் இருந்தால் போதும். கடற்கரையில் திருமணத்தை நடத்த அனுமதி பெறலாம் என தமிழக அரசின் புதிய திட்டம் சொல்கிறது. இடத்திற்கான முன்பதிவு கட்டணம் பராமரிப்புக்காக சுமார் ரூ. 10,000 செலுத்த வேண்டியிருக்கும் மேலும் தங்குமிடம் 22 மணி நேர தங்குமிடம் சுமார் ரூ.5,000 செலவில் கிடைக்கும். இதனை தமிழக சுற்றுலாத்துறை இணையதளத்தில் முன்பதிவு சேட்டு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

பணக்காரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் மட்டுமே நடத்தி வந்த பீச் வெட்டிங் நிகழ்ச்சிகளை இனி சாதாரண நடுத்தர மக்களும் மற்றும் ஏழை மக்களுக்கும்  நடத்தும் கனவு நனவாகும் அறிவிப்பாக இருக்கும் என தெரிகிறது. பொதுவாக சமூக வலைத்தளங்களிலும் இதுபோன்ற ஆடம்பர திருமண நிகழ்ச்சிகள் அவ்வப்போது வைரலாகும். இதுபோன்ற பீச்களில் திருமணம் நடத்துவது பலரின் கனவாக மாறி வருகிறது. இந்த அறிவிப்பு பலருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். இங்குள்ள ஹோட்டல்களில் வாடகைக்கு எடுத்து பீச்களில் திருமணம் நடத்த வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் செலவு ஆகும். மேலும் தங்குமிடம் உணவு என்பது எல்லாம் கணிக்க முடியாத செலவாக இருக்கும். அந்த அளவு ஆடம்பரமாக நம்மால் திருமணத்தை நடத்த முடியாது என நினைக்கும் நடுத்தர மக்களின் கனவை நனவாக்கும் வகையில் தமிழக அரசு அதிரடி திட்டம் ஒன்றை கையில் முன்னெடுத்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com