தமிழகத்தில் முதல் முறையாக AI தொழில்நுட்ப துறை..! அமைச்சராகிறார் வேளச்சேரி குமார்

தற்போது அதற்கென ஒரு துறை அமைக்கப்பட்டது வரவேற்கதக்கதாக பார்க்கபடுகிறது
ai minister
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த நிலையில், இன்று 23 அமைச்சர்களுக்கான பதவி ஏற்பு விழா நடந்தது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில் 23 அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர். இதையடுத்து தமிழகத்தில் முதல் முறையாக இத்தனை புதுமுகங்கள் அமைச்சர்கள் ஆவது அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. தவெக அமைச்சரவையில் இளைஞர்கள், பெண்கள், விஜய் மக்கள் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பட்டியலினத்தை சேர்ந்த MLA-க்கள் என அதிகாரத்தை பகிர்ந்து வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியாவில் இரண்டவது மாநிலமாக AI தகவல் தொழில்நுட்பத் துறை தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கேரளா மாநிலத்தில் மே 21ம் தேதி அமைச்சரவை பதவியேற்பின் போது AI துறை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கு அமைச்சரும்  நியமிக்கப்பட்டார். இந்தியாவில் முதல் முறையாக AI தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக கேரளா மாநில பி.கே. குன்ஹாலிகுட்டி நியமிக்கப்பட்டர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் மூத்த தலைவர் பி.கே. குன்ஹாலிகுட்டிக்கு தொழில்கள் மற்றும் வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டது. கேரள அரசு முதல் முறையாக அமைச்சரவையில் செயற்கை நுண்ணறிவு (AI)க்கென ஒரு பிரத்யேகத் துறையை உருவாக்கியது, இந்த நடவடிக்கை மாநிலத்தின் கட்டமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது தமிழகத்திலும் இந்த துறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக AI தகவல் தொழில்நுட்பத் துறையின் அமைச்சராக சென்னை வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் குமார் பதவி ஏற்றுக் கொண்டார். இந்த துறை பலரின் கவனைத்தை பெற்றுள்ளது. தமிழகம் AI தொழில்நுட்பதில் வளர்ந்து வரும் மாநிலமாக உருவெடுத்து வருகிறது. தற்போது அதற்கென ஒரு துறை அமைக்கப்பட்டது வரவேற்கதக்கதாக பார்க்கபடுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவுத் துறையானது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளுடன் சேர்த்து, தொழில்கள் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ்  செயல்படும்.

வேளச்சேரி தொகுதியின் வெற்றி பெற்ற வேட்பாளர் அமைச்சராவது இதுவே  முதல் முறையாகும். குமார் “ஆண்டவன் மீது ஆணையாக” என உறுதிமொழி கூறி அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொன்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com