தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, திமுகவைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது கைது நடவடிக்கைகளும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகளும் நடைபெற்று வருகின்றன. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்பான சோதனை தொடங்கி, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டது வரை அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், திமுகவினர் மட்டுமே குறிவைக்கப்படுகிறார்களா என்ற அரசியல் கேள்வி எழுந்துள்ளது. அதேநேரத்தில், இந்த நடவடிக்கைகள் சட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதி என ஆளும் தரப்பு விளக்கமளிக்கக்கூடும். இந்தச் சூழலில், முதல்வர் விஜய் குறிப்பிட்ட அந்த மூன்று ஃபைல்கள் என்னென்ன என்ற கேள்வியும் கவனம் பெற்றுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீட்டில் கடந்த ஜூன் 25 சோதனை நடைபெற்றது. திமுக முன்னாள் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ஏழு குழுக்களாக 35 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலும் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 3 அன்று திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்ட மன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். தவெக ஆட்சிக்கு வந்து கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் அமைச்சர். தூத்துக்குடி ஆத்தூர் பேரூராட்சிக்கு ஆய்வுக்கு வந்த அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பொது மேடையில், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும், முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். போலீசாரின் காரை மறித்து, கைதை எதிர்த்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
அதன் பின்னர் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் கீழ் , ஜூலை 20 கைது செய்யப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆகஸ்ட் 4ம் தேதி கைது செய்யப்பட்டார். தஞ்சாவூரில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பின் தவெகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் செய்யப்பட்டார். அவரின் கைது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அன்று இரவு 9 மணி அளவில் அவர் விடுவிக்கப்பட்டார்.
அதை அடுத்து செப்டம்பர் 5ம் தேதி திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கே.என். நேருவுக்கு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். கடந்த ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செயல்பட்ட அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு, DTCP அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்த குற்றச்சாட்டில் திமுக நிர்வாகி பிடி அரசகுமார் உள்ளிட்ட 3 பேர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கைகள் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை என திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் குறிவைக்கப்படுகிறார்கள் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவி வருகிறது. மேலும் இதில் அதிமுகவை சார்ந்தவர்கள் மீது இதுவரை இதுபோன்ற நடவடிக்கைகள் எதுவும் இல்லை. மேலும் அவர்களில் சிலர் அதிமுகவில் இருந்து விலகி தவெக-வில் இணைத்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிலர் அங்கிருந்து வர தயாராக உள்ளதகவும் சொல்லப்படுகிறது. அதற்காகவே அதிமுகவை தவெக குறி வைக்க தவிர்த்து வருகிறது என சொல்லப்படுகிறது.
தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கைது நடவடிக்கைகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகளால், திமுக முன்னாள் அமைச்சர்களும் முக்கிய நிர்வாகிகளும் மட்டுமே குறிவைக்கப்படுகிறார்களா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. அதேநேரத்தில், அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மீது இதுவரை இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மேலும், அதிமுகவிலிருந்து சிலர் விலகித் தவெகவில் இணைந்துள்ளதாகவும், இன்னும் சிலர் இணையத் தயாராக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதன் காரணமாகவே அதிமுகவைத் தவெக அரசு குறிவைப்பதைத் தவிர்த்து வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்