“கட்சியின் செயல் தலைவராகும் மகள் காந்திமதி” - மகனுக்கு எதிரான போட்டியில் ராமதாஸ் வைத்த செக்!

ராமதாஸ் தனது மகளான காந்திமதி பரசுராமனை கட்சியின் செயல் தலைவராக பதவி..
“கட்சியின் செயல் தலைவராகும் மகள் காந்திமதி” - மகனுக்கு எதிரான போட்டியில் ராமதாஸ் வைத்த செக்!
Published on
Updated on
1 min read

தர்மபுரியில் இன்று நடந்த பாமக பொதுக்குழுவில் தனது மகளை செயல் குழு தலைவராக ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக கட்சியில் தந்தை மற்றும் மகனுக்கு இடையே யாருக்கு பாமக சொந்தம் என்ற போட்டி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ராமதாஸ் தனது மகளான காந்திமதி பரசுராமனை கட்சியின் செயல் தலைவராக பதவி அமர்த்தியுள்ளார். ஏற்கனவே ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் “அன்புமணியை எம்பியாக பதவி அமர்த்தி பெரிய தவறு செய்துவிட்டேன். கட்சி இந்த நிலையில் இருக்க அவரிடம் தலைமை பொறுப்பு இல்லாதது தான் காரணம்” என தெரிவித்திருந்தார். 

இதனை தொடர்ந்து உட்கட்சி பூசல் நிலவி வந்த நிலையில் தந்தை மற்றும் மகனுக்கு இடையே கட்சி யாருக்கு சொந்தம் என்ற போட்டி வெளிப்படையாக நடந்து வருகிறது. ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சியின் பதிவுகளில் இருந்து விலகுவதும் அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதும் என மாறி மாறி இருவரும் கட்சி பதவிகளை வேறு வேறு நபர்களுக்கு கொடுத்து வந்தனர்.  மேலும் ராமதாஸ் தனது மகன் அன்புமணி மீது பல்வேறு குற்றசாட்டுகளை தொடர்ந்து அடுக்கி வந்த சூழலில் அன்புமணியின் மீதான நம்பிக்கை அவரது ஆதரவாளர்களிடையே குறைய துவங்கியுள்ளது அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற மகளிரணி மாநாட்டில் அவரது மகள் காந்திமதி பெரும் பங்கு வகித்திருந்தார். அப்போதிருந்தே ராமதாஸ் அவரது மகளுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி சலலைப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது நடந்த பொதுக்குழுவில் கட்சியின் செயல் குழு தலைவர் பதவியை காந்திமதிக்கு வழங்கியுள்ளது. ராமதாஸ் ஆதரவாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த முடிவு அன்புமணிக்கு மிகுந்த பின்னடைவாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்,  சில விஷயம் அறிந்தவர்கள்.  

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com