தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல்! 11 மணிக்கே மிரள வைக்கும் ஓட்டு சதவீதம்.. காங்கேயத்தில் செம வேகம்! 'லிஸ்ட்டில் டாப்-ல்' இருக்கும் மாவட்டம் எது?

இறுதி தேர்தல் நிலவரம் 80 சதவீதத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கேயம் சட்டமன்றத் தொகுதி 43.65% வாக்கு பதிவு
காங்கேயம் சட்டமன்றத் தொகுதி 43.65% வாக்கு பதிவுகாங்கேயம் சட்டமன்றத் தொகுதி 43.65% வாக்கு பதிவு
Published on
Updated on
2 min read

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெளியாகும் புள்ளிவிவரங்கள் ஜனநாயக திருவிழாவின் வெற்றியைப் பறைசாற்றுகின்றன. குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கேயம் சட்டமன்றத் தொகுதி மற்ற அனைத்துப் பகுதிகளையும் பின்னுக்குத் தள்ளி, காலை 11 மணி நிலவரப்படி 43.65 சதவீத வாக்குகளைப் பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பே வாக்காளர்கள் காட்டிய இந்த வேகம், இந்தத் தேர்தலில் புதிய வரலாறு படைக்கப்படுவதைக் காட்டுகிறது.

விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 11 மணி நிலவரப்படி 38.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அந்த மாவட்டத்தில் திருச்சுழி தொகுதி 39.98 சதவீதத்துடன் மாவட்ட அளவில் முன்னிலையில் இருக்கிறது. அருப்புக்கோட்டையில் 38.87 சதவீதமும், ராஜபாளையத்தில் 38.27 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக உள்ளது. அங்கு செய்யார் தொகுதி 39.65 சதவீதத்துடன் முதலிடத்திலும், ஆரணி 39.22 சதவீதத்துடனும் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒட்டுமொத்த சராசரி 38 சதவீதத்தைத் தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் மற்ற முக்கிய மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் திருவாரூரிலும் வாக்குப்பதிவு சீராக உயர்ந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 36.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒரத்தநாடு தொகுதி 39.05 சதவீதத்துடன் தஞ்சை மாவட்டத்தில் முன்னிலை பெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த சதவீதம் 37.19-ஆக உள்ளது. இதில் திருத்துறைப்பூண்டி 37.78 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 36.30 சதவீதமும், தென்காசி மாவட்டத்தில் 36.31 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. தென்காசியில் கடையநல்லூர் தொகுதி 37.05 சதவீதத்துடன் மற்ற தொகுதிகளை விட முந்திச் செல்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் கனிமொழி அவர்கள் வெளியிட்ட தகவலின்படி, 337 வாக்குச்சாவடி மையங்களிலும் சேர்த்து 38.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் தனித் தொகுதியில் 38.97 சதவீதமும், குன்னம் தொகுதியில் 36.72 சதவீதமும் என மாவட்ட சராசரி 37.89-ஆக பதிவாகியுள்ளது. தென் தமிழகத்தின் எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களை விட சற்று நிதானமாக 34.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மதிய வேளையில் அங்கு கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீலகிரியில் குளிர்ச்சியான காலநிலை நிலவினாலும், வாக்குப்பதிவு வேகம் சற்று குறைவாகவே உள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மூன்று தொகுதிகளில் உதகையில் 14.80 சதவீதம், கூடலூரில் 16.42 சதவீதம் மற்றும் குன்னூரில் 15.41 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளன. மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது நீலகிரி பின்தங்கியே உள்ளது. தமிழகம் முழுவதும் சராசரியாக 37 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் 11 மணிக்குள் பதிவாகி இருப்பது, ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நீடிக்கும் என்பதால், இறுதி நிலவரம் 80 சதவீதத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com