

திருப்பூர் - தாராபுரத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (செப் 26) திமுக சார்பில் போட்டியிடும் வழக்கறிஞரும், திமுக மகளிர் அணி உறுப்பினருமான எஸ். சுகன்யா-விற்கு ஆதரவாக களமிறங்கி பரப்புரையில் ஈடுபட்டார்.
திறந்த வெளி வாகனத்தில் இடைத்தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசினை விமர்சித்தும், மக்களுக்காக சட்டமன்றத்தில் திமுக குரல் கொடுக்கும் என்று கூறி, திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் முன்பு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது மக்களிடம், "சோஃபா டோர் டெலிவரி செய்யப்பட்டது. எல்லா கட்சி தலைவர்கள் வீட்டுக்கும் சோஃபா போச்சு. சோஃபா எடுத்துட்டு போனது யாரு? அவரே போய் டெலிவரி பண்ணாரு. மே 10ம் தேதி ஆட்சி அமைச்சாரு, வாக்கு எண்ணிக்கை நடந்தது சட்டசபையில. பேசும்போது எதிர்க்கட்சி தலைவர் நானு, பேசுனேன் . உங்களுக்கு அறுதி பெரும்பான்மை கிடையாது. மெஜாரிட்டி கிடையாது, 118 வேணும் உங்ககிட்ட கிடையாது.
எங்க தயவுல எங்க தலைவருடைய பெயரை சொல்லி, எங்க ஆட்சியுடைய சாதனைகளை சொல்லி வெற்றி பெற்றவர்களோட.. எங்க தயவுல ஆட்சி அமைக்கிறீங்க" என்று அன்று கூறியதை குறிப்பிட்டார். பின்னர், "அதுமட்டும் இல்ல, அதிமுகவை கிட்டத்தட்ட இரண்டு பிளந்துட்டீங்க. அதுல ஒரு குரூப் உங்களுக்கு வாக்களிப்பாங்க. அத வச்சி நீங்க ஆட்சியமைக்க போறீங்க.
இந்த கருமத்தை பார்க்க நாங்க உள்ள இருக்க மாட்டோம், நாங்க வெளிநடப்பு செய்றோம்" என்று கூறி வெளிநடப்பு செய்து வந்ததை மக்களிடம் குறிப்பிட்டு பேசினார்.
மே 11-ம் தேதி எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் நீங்க தேர்வு செய்து அனுப்புனீங்கள்ல அவங்க பேரு என்ன சத்தியபாமாவை..? என்று கூட்டத்தினரை பார்த்து உதயநிதி கேட்க, கூட்டத்தில் இருந்தவர்கள் அதற்கு 'பெட்டி பாமா' என்று கூற "ஹோ.. பெயரையே மாத்திட்டீங்களா?" என்று கேட்க கூட்டதில் சிரிப்பலை எழுந்தது. மேலும், தலைவர்களுக்கெல்லாம் சோஃபா, சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் பெட்டி என்று தவெக- வை சாடி பேசினார்.
தொடர்ந்து மக்களிடம் பேசிய அவர், "நீங்க பிக்பாஸ் பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா?" என்று கேள்வியினை கேட்டுவிட்டு, இந்த பிக் பாஸிற்கு முன்னாடி ஒரு பிக் பாஸ் நடந்தது தெரியுமா உங்களுக்கு?, சட்டமன்றம் நடந்தது 40 நாள் நடந்தது. நாங்க எல்லாம் அப்போ எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு தெரியுமா? என்று மக்கள் முன்னிலையில் நகைச்சுவையாக பேச தொங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், "சட்டமன்றத்துல சட்டமன்ற உறுப்பினர்கள் அவங்க தொகுதி பிரச்சனையை பற்றி பேசுவாங்க. எங்க தொகுதியில ரோடு இல்ல, தண்ணீர் வரல, சாக்கடை பிரச்சனை ஒரு சமுதாய நலக்கூடம் கட்டிக் கொடுங்க, ஒரு ஸ்கூல் கட்டிகொண்டுங்க இதுதானா கேட்பாங்க?.
குறைகள் இருந்தா சொல்லுவாங்க, எங்க தொகுதியில இந்த இந்த பிரச்சனைகள் இருக்கு தீர்த்து வைங்கன்னு சொல்லுவாங்க. ஆனா, நாங்க அதைத்தான் பேசுறோம். திராவிட முன்னேற்ற கழகம் சட்டமன்றத்துல மக்கள் பிரச்சனையை பேசுறோம். கேள்வி கேட்குறோம்.
இதுக்கு ஆளும்கட்சி, முக்கியமா முதலமைச்சர். முதலமைச்சர் வாய தொறந்து பேசுனதா சரித்திரமே கிடையாது.
புடிச்சி வச்ச புள்ளயாருனு சொல்லுவாங்க அப்புடிதான் உட்கார்திருப்பாரு. சட்டசபையில கேள்வி கேட்டா பதில் சொல்லணும். முதலைமைச்சர் எழுந்திருச்சி பதில் சொல்லுவாரு. அந்த துறையுடைய அமைச்சர் எழுந்து பதில் சொல்லுவாரு, அப்போ நாம திருப்பி எதிர் கேள்வி கேட்கலாம். பாட்டு பாடுனா நாங்க என்ன பண்றது? இதுக்காக நாம என்ன பாட்டு கிளாசுக்கா போகமுடியும்? என்று அவர் கேட்க கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
தொடர்ந்து பேசிய அவர், வெறும் பாட்டு மன்றம். சட்டமன்றத்திலேயே சொல்லிட்டேன் சபா நாயகர் அவர்களே எங்களுக்கு சந்தேகமா இருக்கு, நாங்க சட்டமன்றத்துக்குத்தான் வந்திருக்கிறோமா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா? எல்லாருமே பாட்டு பாடுறீங்க என்று சட்டமன்றத்தில் கேட்டதை மக்களோடு பகிர்ந்து கொண்டார்.
மேலும், அமைச்சர் பாட்டு பாடுறாரு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பாட்டு பாடுறாங்க, சபாநாயகரும் பாட்டு பாடுறாரு. முதலமைச்சர் சபாநாயகர் ஆக்ஷன்-னு சொன்னா நடிக்குறாரு. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போன மாதிரியே இருக்கு.
இப்போ இருக்குற ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ன சொல்றாரு தெரியுமா? சபாநாயகர் அவர்களே முதலமைச்சரை எங்களால் பார்க்க முடியால.. எதிர்ல உட்காருறவங்க எல்லாம் பார்க்குறாங்க. நாங்க சட்டசபைக்கு வர்றதே முதலமைச்சரை பார்க்கணும்னு, அவரு சிரிக்குறத பார்க்கணும், அவரு மூஞ்ச பார்க்கணும். அதுனால நாங்க பார்க்குற மாதிரி எல்லாருக்கும் ஒரு டிவி குடுங்க" என்று சட்டமன்றத்தில் ஆளும்கட்சி அமைச்சர் பேசியதை சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "நான் சொன்னேன், தயவு செய்து ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாரும் எங்க பக்கத்துல வந்து உட்கார்ந்திருங்க, நாங்க எழுந்திருச்சி போயிறோம். எங்களால இங்க உட்கார்ந்து அவரு மூஞ்ச எல்லாம் பார்க்கமுடியால" என்று அவர் சட்டமன்றத்தில் பேசியதை பரப்புரையில் ஈடுபட்டபோது மக்களிடம் பகிர்ந்துகொண்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்