சத்யபாமாவா? பெட்டிபாமாவா?.. தாராபுரம் தொகுதியில் இறங்கி அடித்த உதயநிதி! விஜய் பன்ச்சுக்கு சமரசமில்லா பதிலடி

"முதலமைச்சர் என்ன செய்கிறார்? திமுக எம்.எல்.ஏ.-க்களைப் பார்த்தால் அவர்கள் மீது கேஸ் போடுகிறார். அதிமுக எம்.எல்.ஏ.-க்களைப் பார்த்தால் அவர்களுக்கு பெட்டி கொடுத்து வாங்கி விடுகிறார்." - உதயநிதி ஸ்டாலின்
Udhayanidhi Campaign File Image
சத்யபாமாவா? பெட்டிபாமாவா?.. தாராபுரம் தொகுதியில் இறங்கி அடித்த உதயநிதி! விஜய் பன்ச்சுக்கு சமரசமில்லா பதிலடிUdhay
Published on: 
Updated on: 
2 min read

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தாராபுரம் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

சோபா டெலிவரி செய்த முதலமைச்சர்

தவெக அரசையும் முதலமைச்சரையும் கடுமையாக விமர்சித்து பேசிய அவர், "அவர்களிடம் (தவெக) 107 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

பத்தாம் தேதி நம்ம கூட இருந்த கூட்டணிக் கட்சிகள் போய் மீண்டும் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி வரக்கூடாது என்ற ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துச் ஆதரவு கொடுத்தனர். ஒரு சிலர் தலைவரிடம் சொல்லிவிட்டுப் போனார்கள். ஒரு சிலர் தலைவரிடம் சொல்லாமலேயே திருட்டுத்தனமாகப் போனார்கள்.

அவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும், நாம் மறக்க மாட்டோம்.

முதுகில் குத்தின துரோகிகளை தமிழ் மக்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள்.

இன்றைக்கோ நீங்கள் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர் உங்கள் முதுகில் குத்தியிருக்கிறார். அவருக்கு மீண்டும் அந்த வாய்ப்பைக் கொடுப்பீர்களா?

இந்த முதலமைச்சர் கூட்டணியில் உள்ள தலைவர்கள் வீட்டுக்கெல்லாம் போய் அவரே சோபா டெலிவரி செய்தார்.

எல்லா தலைவர்கள் வீட்டுக்கும் சோபா போனது.

சோபாக்களை முதலமைச்சர் அவரே சென்று டெலிவரி செய்தார்." என விமர்சித்தார்.

"இந்த கருமத்தைப் பார்க்க நாங்க உள்ள இருக்க மாட்டோம்"

மேலும், "மே 10-ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

எதிர்கட்சி தலைவராக இருந்த நான், "உங்களுக்கு பெரும்பான்மை கிடையாது. எங்களுடைய தயவில், எங்கள் தலைவருடைய பெயரைச் சொல்லி, எங்கள் ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்டு வெற்றி பெற்றவர்களுடைய தயவில் ஆட்சி அமைக்கிறீர்கள்.

அதுமட்டுமில்லை, அதிமுகவை இரண்டாகப் பிளந்து விட்டீர்கள். அதில் ஒரு குழு உங்களுக்கு வாக்களிக்கிறார்கள். அதை வைத்து நீங்கள் ஆட்சி அமைக்கப் போகிறீர்கள்.

இந்த கருமத்தைப் பார்க்க நாங்க உள்ள இருக்க மாட்டோம், நாங்க வெளிநடப்பு செய்கிறோம்" அப்படின்னு பேசி, நாங்க வெளிநடப்பு செய்துவிட்டு வந்துவிட்டோம்.

மே 11-ஆம் தேதி நீங்கள் தேர்வு செய்த அமைச்சர்கள், அவங்க பேர் என்ன, சத்யபாமாவா?

பெயரை மாத்திட்டீங்களா, பெட்டிபாமாவா?

பெட்டிபாமாவா?

தலைவர்களுக்கெல்லாம் சோபா, சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் பெட்டி.

இந்த ஆட்சி அமைந்ததிலிருந்து முதலமைச்சர் என்ன செய்கிறார்? திமுக எம்.எல்.ஏ.-க்களைப் பார்த்தால் அவர்கள் மீது கேஸ் போடுகிறார். அதிமுக எம்.எல்.ஏ.-க்களைப் பார்த்தால் அவர்களுக்கு பெட்டி கொடுத்து வாங்கி விடுகிறார்.

நம்ம மீது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்று ஒரு புகார் சொல்வார்கள். ஆனால் இந்த முதலமைச்சர் என்ன பெரிய மாற்றம் பண்ணியிருக்கார், தெரியுமா?

ஹோல்சேலில் எம்.எல்.ஏ.-க்களையே தூக்கி கட்சியை உடைத்து விடுவது. இப்போது அப்படித்தான் அதிமுகவிலிருந்து 7 எம்.எல்.ஏ.க்களை பெட்டி கொடுத்து தூக்கி இருக்கிறார்கள்." என்றார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி, "மே 10-ஆம் தேதி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பொறுப்பேற்றுக் கொண்டோம். பத்தே நாள், விரலில் வைத்த மை கூட அழிந்திருக்காது. அவர்கள் சட்டசபையிலேயே கட்சி மாறி, அந்த கட்சிக்கு போய் சேர்ந்தனர்.

இது அநியாயமான குதிரை பேரம் என்று எங்கள் தலைவர் அப்போதே சொன்னார்.

அப்போது குதிரை பேரம் நடக்கவில்லை, என்ன சாட்சி இருக்கிறது என்றார்கள்.

நீங்கள் எந்த சின்னத்தில் ஒரு நபரை தேர்ந்தெடுத்து அனுப்பினீர்களோ, அவர்களை ராஜினாமா செய்ய வைத்து, மீண்டும் அவர்களுக்கே அந்த வாய்ப்பைக் கொடுத்து உங்களிடம் அனுப்பியிருக்கிறார்கள் என்றால், தாராபுரம் மக்கள் மீண்டும் அந்த வேட்பாளருக்கு வாக்களிப்பீங்க என நம்பி உங்களிடம் அனுப்பியிருக்கிறார்கள். அந்தத் தப்பை நீங்கள் மீண்டும் செய்வீர்களா?

ஏற்கனவே நீங்கள் வாக்களித்த ஆளுங்கட்சி வேட்பாளருக்கு மீண்டும் வாக்களித்தீர்கள் என்றால், அவர் சட்டமன்றத்தில் உங்களுக்காக குரல் கொடுப்பார் என்று நினைக்கிறீர்களா?

நீங்க பிக் பாஸ் பார்க்க ஆரம்பித்து இருப்பீர்கள். பிக் பாஸுக்கு முன்னாடி ஒரு பிக் பாஸ் நடந்தது. 40 நாட்கள் சட்டமன்றம் நடந்ததுல நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா?

சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய தொகுதி பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவார்கள். எங்கள் தொகுதியில் ரோடு இல்லை, தண்ணீர் இல்லை, சாக்கடை பிரச்சனை, விளையாட்டு மைதானம், பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் கட்டித் தாருங்கள் என்று கேட்பார்கள், குறை இருந்தால் சொல்வார்கள்.

திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கேள்வி கேட்டு தொகுதிப் பிரச்சனைகளைப் பேசுவோம்.

ஆனால், முதலமைச்சர் வாயைத் திறந்து பேசுவதாகச் சரித்திரமே கிடையாது. பிடித்து வைத்த பிள்ளையார் போலத்தான் உட்கார்ந்திருப்பார்.

முதலமைச்சர் பதில் சொல்வார்கள், அமைச்சர்கள் பதில் சொல்வார்கள். மீண்டும் நாங்கள் எதிர் கேள்வி கேட்டால் அதற்கும் பதில் சொல்வார்கள்.

ஆனால் சட்டமன்றத்தில் பாட்டு பாடினால் நாங்கள் என்ன செய்வது. நாங்கள் என்ன பாட்டு கிளாசுக்கா போக முடியும்? வெறும் பாட்டு மன்றம்.." எனப் பேசினார்.

Udhayanidhi Campaign File Image
மின்துறை அமைச்சர் பங்கேற்ற விழாவிலேயே மின்வெட்டு! "ஜெனரேட்டர் மாற்றும்போது.." - சமாளிக்கும் நிர்மல் குமார்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com