அருள் விக்னேஷ் வீட்டில் காவல்துறை குவிப்பு.. சிருஷ்டி சிங் கையில் 'ரகசிய வாக்குமூலங்கள்'!கள்ளக்குறிச்சி MLA கைதா?

அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய சிருஷ்டி சிங், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் கணவரும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான அப்துல் ரகுமானிடம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருவம் சுற்றுலா ஆய்வு மாளிகையில் விசாரணை மேற்கொண்டார்.
Kallakurichi Case: Police Beef Up Security at MLA Arul Vignesh’s Residence Amid Secret Inquiries
அருள் விக்னேஷ் வீட்டில் காவல்துறை குவிப்பு.. சிருஷ்டி சிங் கையில் 'ரகசிய வாக்குமூலங்கள்'!கள்ளக்குறிச்சியில் நடப்பது என்ன?
Published on: 
Updated on: 
2 min read

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதல் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

ஆட்சியர் அளித்த புகார்!

முன்னதாக நவம்பர் 23ம் தேதி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார் மாவட்ட ஆட்சியர். அந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் வழக்கறிஞர் திரிசூலி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க, நீதிமன்றம் திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் வழக்கை விசாரிக்கவும், காவல்துறை நிர்வாகப்பிரிவு ஐஜி என்.காமினி விசாரணையை கண்காணிக்கவும் உத்தரவிட்டது.

ரகசிய விசாரணை நடத்திய சிருஷ்டி சிங்!

நேற்று மாவட்ட ஆட்சியரின் கண் மேன், DRO-களிடம் வாக்குமூலம் பெறபட்ட நிலையில், இந்த வழக்கின் முக்கிய அங்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அவரது கணவரிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

சிருஷ்டி சிங் IPS
சிருஷ்டி சிங் IPS

இவ்வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நீதிமன்ற வளாகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. நீதிமன்றத்தால் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி. சிருஷ்டி சிங் மற்றும் நீதிபதி சுவாதி அழகப்பன் ஈனு காலையில் தீவிர ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து நீதிபதி முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளித்தார் பெண் மாவட்ட ஆட்சியர்.

2:30 மணிநேரம் நடந்த விசாரணையில் புகாரின் தன்மை, குறுஞ்செய்தி தொடர்பான ஆதாரங்கள் மற்றும் சம்பவத்தின் பின்னணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய சிருஷ்டி சிங், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் கணவரும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருமான அப்துல் ரகுமானிடம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருவம் சுற்றுலா ஆய்வு மாளிகையில் விசாரணை மேற்கொண்டார்.

காவல்துறை குவிப்பு!

இந்தநிலையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என செய்திகள் வெளியாகின.

அதனால் அவரது ஆதரவாளர்கள் வீட்டின் முன்பு கூட, பரபரப்பு ஏற்பட்டது. அதேவேளையில் அருள் விக்னேஷ் வீட்டின் முன்பு காவல்துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

காலைமுதல் 4 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், இப்போது 10க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

TVK MLA arul vignesh
TVK MLA arul vignesh

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

இந்த வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது எப்போது விசாரணை நடைபெறும் என்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதும் முக்கிய கேள்விகளாக எழுந்துள்ளன.

ரகசிய விசாரணைகள் அடிப்படையில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார் விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங். டிசம்பர் 22-ந் தேதிக்குள் இந்த வழக்கின் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மும்மூரம் காட்டும் திமுக

இதனிடையே, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் நடவடிக்கைகோரி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மனு வழங்கினார்.

மேலும், அருள் விக்னேஷ் மீதான வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் முன்னாள் எம்.பி. கனிமொழி சோமு மனு தாக்கல் செய்துள்ளார்.

இப்படியாக இந்த விவகாரத்தில் மும்மூரம் காட்டி வருகிறது திமுக. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Kallakurichi Case: Police Beef Up Security at MLA Arul Vignesh’s Residence Amid Secret Inquiries
``கலெக்டர் முதல் மேயர் வரை.. ஆபாச வெறிபிடித்த தவெக" - எல்லை மீறுகிறதா அரசியல் ஆபாசம்? முகம் சுழிக்க வைத்த வீடியோ!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.