

இன்று காலை முதல் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை தொடங்கி சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையை தொடங்கினர்.
குறிப்பாக, சென்னை மயிலாப்பூரில் உள்ள கே.என். நேருவின் வீடு, திருச்சி தில்லை நகரில் உள்ள அவரது இல்லம், அபிராமபுரத்தில் உள்ள அவரது சகோதரரின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் குழுவாக வந்து வீடுகளில் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், திருச்சி தில்லை நகரில் உள்ள தனது இல்லத்திற்கு கே.என். நேரு வந்துள்ளதாகவும் அவரிடம் லட்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் அரசு ஒப்பந்தங்கள் வழங்க லஞ்சம் வசூலித்ததில் மொத்தம் 1,020 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக ஆதாரங்களை தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பியது. அதையடுத்து இந்த அதிரடி சோதனை நடத்தபடுவதாக தெரிகிறது.
சட்டமன்ற கூட்டத்தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இந்த ரெய்டு அரசியல் காரணங்களுக்காக நடப்பதாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான M K ஸ்டாலின் கண்டனம் theதெரிவிதுள்ளார். மேலும் “இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்” என்றும் தவெக அரசை சாடி இருந்தார்.
அதையடுத்து திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இந்த சோதனை நடவடிக்கை குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தனது சமூக வலைதள பதிவில், “சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், தொடர்ந்து அவதூறுகளையும் திசைதிருப்பல் நாடகங்களையும் அரங்கேற்றி வந்த தவெக அரசு, தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்று, கழக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே என் நேரு அவர்களைப் பழிவாங்கப் பார்க்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் திராவிட கழகம் அல்ல” என்றும் “எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பதற்காக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த ஜனநாயக விரோத தவெக அரசின் நடவடிக்கைகளை பார்த்து கழகம் ஒருபோதும் அஞ்சாது” என்றும் தெரிவித்துள்ளார். மேலும் லட்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தும் திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என் நேரு வீட்டிற்கு திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை தந்துள்ளார்.
சட்டமன்ற கூட்டத்தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் கே என் நேரு வீட்டில் லட்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் கே என் நேரு வீட்டின் முன் குவிந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் விஜய் தலமையிலான தவெக ஆட்சி அமைத்ததில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் நடந்து வருவது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் விவாதமாக மாறி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.