நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தலைவர்கள்…தமிழகத்திற்கு பேரிழப்பு என வருத்தம்!

தகைசால் தலைவரை அரசு மரியாதையுடன் வழி அனுப்புவோம் எனவும் தெரிவித்துள்ளார்...
நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தலைவர்கள்…தமிழகத்திற்கு பேரிழப்பு என வருத்தம்!
Published on
Updated on
2 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல் நல குறைபாடு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார். அதனை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் "தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை. அவர் பெற்ற விருதுகள், பரிசுகள் எவையானாலும், அவற்றோடு தொகை அனைத்தையும் கட்சிக்காகவும், மக்கள் நலனுக்காக அரசிடம் ஒப்படைத்த அப்பழுக்கற்ற தலைவர் அவர்!'". தோழரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்! என பதிவிட்டியுள்ளார். மேலும் தகைசால் தலைவரை அரசு மரியாதையுடன் வழி அனுப்புவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் "தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த' சிறந்த பண்பாளர் திரு. நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவுசெய்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள், ''பொதுவாழ்வில் மக்களுக்காக அப்பழுக்கற்று வாழ்ந்த பெருந்தமிழர்! 7ஆண்டுகாலம் சிறையில் வதைபட்டு விடுதலைக்குப் போராடிய விடுதலை வீரர்!

இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் போராளி! வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது எளிய வாழ்க்கை வாழ்ந்த பொதுவுடைமை பிதாமகன்" என்றும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். தியாகத்திற்கு உதாரணமாகத் திகழ்ந்த அவர், அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படுபவராக திகழ்ந்தார்.

"தோழர் நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், தோழர்கள், பொதுவுடைமை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பாமக தலைவர் அன்புமணி இரங்கலாய் பதிவிட்டுள்ளார்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் அய்யா நல்லகண்ணு-வின் இறப்பிற்கு "சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்" என இரங்கல் தெரிவித்தார்.

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், "80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர். தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்" என பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும் விசிக தலைவர் திருமாவளவன் மறைந்த மூத்த தலைவர் நல்லகண்ணு-விற்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com