தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன எதிர்பாராத சில திருப்பங்கள் கூட்டணி கட்சிகள் இடையே நடைபெற்று வருகிறது. மேலும் சிலர் புதிய கட்சியை தொடங்கிய தனக்கான ஆதரவாளர்களை ஒன்று திரட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே தேர்தல் களத்தில் ஆற்றலுடன் செயல்பட்டு வரும் சசிகலா தனக்கான தொண்டர்களை தன்னுடன் ஒன்றிணைத்து வந்தார். அப்போது அவரிடம் பலரும் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க போகிறீர்கள் என கேள்வி எழுப்பி வந்த நிலையில் விரைவில் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்து வந்தார்.
பின்னர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று புதிய அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்து வந்த சசிகலா இன்று ராமநாதபுரம் அருகே கோட்டைமேடு பகுதியில் களம் காண்போம் அம்மாவின் ஆட்சி அமைப்போம் என்று அவரது தலைமையில் நடந்த மாநாட்டில் அவர் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் அந்த கட்சியின் கொடியாக ஜெயலலிதா, அண்ணா, எம்ஜிஆர் ஆகிய மூவரின் படங்கள் அடங்கிய சிவப்பு வெள்ளை கருப்பு ஆகிய மூன்று நிறங்கள் உடைய கோடியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
தொடர்ந்து இது குறித்து பேசிய சசிகலா “கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்கிறேன் இதில் எந்த மாற்றமும் இல்லை, ஒரு போதும் இந்த முடிவில் இருந்து பின் வாங்க போவதில்லை.. அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இந்த கட்சியில் நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டது. நம்பி முதல்வராக்கியவர்கள் என் முதுகில் குத்தி விட்டார்கள்… என்னை கட்சி கொடியை பயன்படுத்த கூடாது என கூறிவிட்டனர். தொடர்ந்து 10 முறை தேர்தலில் தோல்வியை சந்தித்தவர் எடப்பாடி பழனிச்சாமி… ஒன்பது ஆண்டுகள் அமைதியாக இருந்தது போல இனியும் அமைதியாக இருக்க முடியாது.
அப்படி இருந்தால் அது நான் மக்களுக்கும் தொண்டர்களுக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகம்.. அறிஞர் அண்ணா, ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் வழியில் வந்த திராவிட கட்சியாக இது இருக்கும். இந்த கட்சியின் மூலம் ஜெயலலிதா வழியில் பல துரோகிகளை அழிப்பேன்” என கூறி இந்த கொடியை சாதி பேதமற்ற தலைவர்கள் வாழ்ந்த ராமநாதபுரத்தில் வெளியிடுவது மகிஷி என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் சசிகலா இந்த கட்சியை தொடங்கி பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்க உள்ளார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.