
கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர்க வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த விவகாரத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. அதோடு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரம் குறித்த பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதில் தற்போது தீர்ப்பளித்துள்ள ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு கரூர் சம்பவத்தை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமையிலும் ஒரு குழு அமைகப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் ஓய்வு பெற்ற இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்களாக இருக்க கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி செந்தில்குமார் சொன்ன கருத்துக்களை எதிர்த்துதான் தவெக உச்சநீதிமன்றம் சென்றது, கரூர் சம்பவம் ஒரு ‘Man Made Disaster’, விஜய் -க்கு கொஞ்சம்கூட தலைப்பண்பு இல்லை, என கடுமையாக விமர்சித்திருந்தது. அதுவரை கரூர் சம்பவத்திற்கு திமுக மட்டுமே காரணம் என்றிருந்த சூழல் மாறி விஜய் -ம் விமர்சிக்கப்பட்டார்.
இந்த சூழலில்தான், பாஜக -வின் ‘வேறொரு முகம்’ தான் விஜய், என திமுக கூட்டணியில் இருக்கும் விசிக சொல்லி வருகிறது. அதற்கு காரணம் என்னதான் பாசிச பாஜக என விஜய் விமர்சித்தாலும், பாஜக -வினர் மிக கடுமையான விமர்சனங்களை விஜய்க்கு எதிராக முன்வைத்தது இல்லை.
இந்தநிலையில்தான் விஜய், "பாஜக -வின் சொற்படியே நடக்கும் நபர், கட்சி ஆரம்பித்ததே பாஜக -விற்காகத்தான்" என, விசிக எம்.பி. ரவிக்குமார் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பதையும் இங்கு நாம் பார்க்க வேண்டும்.
இந்த சூழலில்தான் நீதிமன்றம் அமைத்த புலனாய்வு குழுவை சற்று உற்றுநோக்க வேண்டும், இது வெறும் SIT மட்டுமல்ல CBI -உடன் கூடிய ஒரு விசாரணை குழுவாக அமைந்துள்ளது. கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏன் இத்துணை தீவிரமாக இந்த விவகாரத்தில் தலையிடுகிறது என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால் இந்த CBI விசாரணை தமிழக அரசுக்குத்தான் பின்னடைவாக அமையும், மாநில போலீசின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசு அமைத்த அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு ஆகியவற்றையும் உச்சநீதிமன்றம் சஸ்பண்ட் செய்துள்ளது.
இது உண்மையிலேயே தமிழக வெற்றிக் கழகத்திற்கு சாதகமான ஒரு தீர்ப்புதான், அவர்கள் இதன் மூலம் தங்கள் மீது விழுந்த ‘கொலை’ குற்றச்சாட்டை மறுக்க வாய்ப்பாக அமையும். ஆனால் இந்த தீர்ப்பு மிக முக்கியமான ஒரு ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும், இந்த சிக்கல்களிலிருந்து வெளியே வர விஜய் -க்கு உதவியது பாஜக என சொல்லப்படுகிறது.
ஆனால் நேற்று நடந்த ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய மூத்த பத்திரிகையாளர் மணி, “தொடர்ந்து நான் சொல்லி வருவது போல, விஜய் - அழிவை ஏற்படுத்தக்கூடியவர், அவர் திமுக -விற்கு மிகப்பெரும் சேதங்களை விளைவிப்பார். ஆனால் கரூர் விவகாரத்தில், சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் திமுக தோற்றுவிட்டது, களம் அவர்களுக்கு சாதகமாக இருந்தாலும், மக்களிடையே விஜய் Factor தான் இன்னும் தொற்றிக்கொண்டுள்ளது. மேலும் தேர்தல் சமயம் என்பதால் விஜய் மீது அவர்கள் எடுக்காமல் இருந்த நடவடிக்கை, திமுகவிற்கே பாதகமாக அமைந்துவிட்டது” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.