“விசில் சின்னம் அருகே கருப்பு மை” - திடீரென நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு.. மதுராந்தகத்தில் பரபரப்பு!

சந்தேகம் அடைந்த வாக்காளர்கள் மற்றும் தேர்தல் முகவர்கள், வாக்குப்பதிவை நிறுத்தக் கோரி எதிர்ப்பு...
EVM Black Ink Controversy
EVM Black Ink Controversy
Published on: 
Updated on: 
2 min read

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்திற்கு நேராக உள்ள பட்டனில் பெரிய அளவில் கருப்பு மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், தண்டரை புதுச்சேரி பகுதியில் உள்ள 55-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடந்த தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தண்டரை புதுச்சேரி பகுதியில் உள்ள 55-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்திற்கு நேராக உள்ள பட்டனில் பெரிய அளவில் கருப்பு நிற மை இருப்பதை அப்பகுதி வாக்காளர்கள் கவனித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த வாக்காளர்கள் மற்றும் தேர்தல் முகவர்கள், வாக்குப்பதிவை நிறுத்தக் கோரி எதிர்ப்பு தெரிவித்தனர். 

EVM Black Ink Controversy
EVM Black Ink Controversy

இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் சுமார் அரை மணி நேரம் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். வாக்குச்சாவடியில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படும் என்றும், சம்பவம் தொடர்பாக அனைவரிடமும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதியளித்தார்.

EVM Black Ink Controversy
EVM Black Ink Controversy

இதனைத் தொடர்ந்து, அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகு அந்த வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இடைத்தேர்தல் வாக்குப்பதிவின்போது, குறிப்பிட்ட வேட்பாளரின் சின்னத்திற்கு நேராக உள்ள பட்டனில் கருப்பு மை இருந்ததால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சம்பவம் மதுராந்தகம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com