"விஜய் வந்தால் எலும்பை உடைப்போம்.." MLA-வின் சர்ச்சை பேச்சு! காவல்துறையினர் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக பரபரப்பு புகார்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து தன்னை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக பரபரப்பு..
Chief Minister remarks controversy
Chief Minister remarks controversy
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணையின் போது துப்பாக்கி முனையில் தன்னை காவல்துறையினர் மிரட்டுவதாக மார்க்கண்டேயன் குற்றச்சாட்டடிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் குறித்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் "சட்டமன்றத்திற்குள் விஜய் வந்தால் எலும்பை உடைப்போம்" என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக வடக்கு மாவட்டச் செயலாளரும் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிட்ட பாலசுப்பிரமணியன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மார்க்கண்டேயன் MLA குறித்து புகார் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜானகி தலைமையிலான காவல்துறையினர் இன்று அதிகாலை அவரை விளாத்திகுளத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இல்லத்தில் வைத்து கைது செய்துள்ளனர். பின்னர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சுமார் 11 மணி நேரமாக விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணைக்கு பின்பு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை காவல்துறையினர் தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முன்பக்கம் வழியாக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை கூட்டி வராமல் கொலை குற்றவாளிகள் மற்றும் கைதிகளை மறைத்துக் கூட்டி வருவது போன்று அரசு மருத்துவமனை பின்பக்க வழியாக கூட்டி சென்றுள்ளனர்.

அப்போது மார்க்கண்டேயன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து தன்னை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். மேலும் தன்னை மிரட்டி மார்ச்சுவரிக்கு கொண்டு செல்ல நினைக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறையினர் விசாரணை என்பது தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காவல்துறையினர் செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை செய்திகளை சேகரிக்க விடாமல் டிஎஸ்பி திபு பத்திரிகையாளர்களை ரவுடிகள் என்று திட்டியதாலும் பத்திரிகையாளர்களை தாக்கியதாலும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com