

இன்று தமிழக சட்டமன்றத்தில், சட்டமன்ற கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் தொடங்கியது. பல்வேறு அறிவிப்புகள் மற்றும் எதிர்க்கட்சியின் கேள்விகள் என முடிவடைந்தது. அதில் அறநிலையத்துறை குறித்த செயல்பாடுகள் மற்றும் முன்னாள் அரசின் நிலைப்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் தங்களது கருத்துக்களை பதிவுசெய்தனர்.
அமைச்சர் ரமேஷ் “அறநிலையதுறையை பொறுத்தவரைக்கும் கோவில்களின் வருமானம் கோவில்களுக்காகவும், கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தான் செலவிடப்படும் என்பதை நம்முடைய ஆளுநர் உரையில் இடம் பெற்றது தான் அதன் சாராம்சம். சமீபத்தில் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் பணிகள் நிறுத்தப்பட்டது. நாம் அறிந்த வரைக்கும் அந்த கோவில்களில் பொதுமக்களுக்கு தேவையான தங்குமிட வசதிகள், அடிப்படைத் தேவையான கழிப்பறை வசதிகள் மேம்படுத்துவதை காட்டிலும், கடந்த திமுக அரசு கமர்சியலாக வணிக வளாகங்கள் கட்டுவது, திருமண மண்டபங்கள் கட்டுவதும் அதன் மூலமாக வருவாய் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்தாகவும் குறிப்பிட்டார்.
மேலும் “அதன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் நாங்கள் அதை ரத்து செய்து வைத்திருந்தோம். உதாரணமாக கடந்த ஆட்சியில் எந்த அளவுக்கு கமர்சியலாக மாற்றி வைத்திருந்தார்கள் என்பது.. குன்னூரில் உள்ள விநாயகர் கோவில் நிதியில் இருந்து 10 கோடி மதிப்பில் மல்டி லெவல் கார் பார்க்கிங் செய்வதற்கான திட்டத்தை திமுக அரசு அனுமதித்துள்ளதாகவும், கழிவறை வசதியில்லாத கோவிலுக்கு ரூ.10 கோடியில் மல்டி லெவல் கார் பார்க்கிங் எதற்கு தேவை? என அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பினார். மேலும் அந்த கோவிலுக்கு தினசரி 500 பேர் மட்டுமே வந்து செல்வதாகவும் அங்கு அடிப்படை தேவை தான் வேண்டும் என்றும் கார் பார்க்கிங் வசதி எதற்கு என்றும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து பேசிய அமைச்சர் ரமேஷ் மத்திய அரசு பழனியில் அமைக்க இருந்த சித்த மருத்துவமனையை கிடப்பில் போடப்பட்டதாகவும் தற்போது அதை தவெக அரசு செயல்படுத்த போவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் நாங்கள் யாருக்கும் பீ டீமாக வேலை செய்ய வேண்டியது இல்லை என்றும் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “எம்எல்ஏ பரிந்துரை அடிப்படையில் தான் அனைத்து திட்டங்களும் நிறைவேற்ற பட்டதாகவும், குன்னூரில் சுற்றுலா பயணிகளுக்கான மல்டி லெவல் பார்க்கிங் அமைப்பதன் மூலம் நகராட்சிக்கு வருவாய் என்பதால் தான் இந்த கார் பார்க்கிங் திட்டம் என்றும் சேகர்பாபு விளக்கம் அளித்திருந்தார். கார் பார்க்கிங் பரிந்துரைத்தாலும் கோவில் நிதியில் இருந்து செய்தது ஏன்? கோவில் நிதியை எடுத்து கார் பார்க்கிங் அமையுங்கள் என பக்தர்கள் கேட்டார்களா? நிம்மதியான தரிசனம் தான் தேவை என்று பதிலளித்தார். “பெரிய கோவில்களில் மல்டி பார்க்கிங் என்பது அத்தியாவசியமான ஒன்று தான், அது தேவையில்லை எனக்கூறமுடியாது” என்று எதிர்க்கட்சி தலைவர் விளக்கம் கொடுத்து முடித்துவைத்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்