

நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்கள் தமிழக வெற்றி கழகத்துடனான கூட்டணி, பிரதமர் வேட்பாளர் குறித்த காங்கிரஸ் மற்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்து குறித்து பேசினார். மேலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்து பேசியதாவது, “தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து ஆதரித்து வருகிறது. தூய்மை பணியாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அரசு உணர்ந்து உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும். தற்போது தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தள்ளி வைத்து இருக்கிறார்கள். போராட்ட பிரதிநிதிகளுடன் அரசு சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முன்வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
அதைத்தொடர்ந்து பிரதமர் வேட்பாளர் விஜய் தான் என்று தவெகவினர் பேசி வருவதை குறித்து செய்தியாளரின் கேள்விக்கு, “விஜய் பிரதமராக வர வேண்டும் என்று அவர் மீது பற்று உள்ளவர்கள் சொல்லும் கருத்து அது” என்று குறிப்பிட்டார். மேலும் “இது விஜய்யின் கருத்து என்று ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது”. ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று தவெகவின் முண்ணனி நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது. முதல்வருடன் நெருக்கமாக தவெக தலைவர்கள் தேசிய அளவில் காங்கிரசுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறார்கள். விஜய், தவெக மூத்த தலைவர்கள் காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டு இருக்கவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “விஜய் பிரதமராக வேண்டும் என்று அவரது கட்சியினர் சொல்லும் விருப்பத்தில் தவறு இல்லை” என்றும் “என்னை கூட கட்சியினர் முதலமைச்சராக வேண்டும் என்று விருப்பத்தை சொல்கின்றனர்” என்றார். தவெக கூட்டணியில் இருப்பதால் கட்சியினர் சொல்வது தவெகவிற்கு எதிரான நிலைப்பாடா..? திமுக கூட்டணியில் இருந்த போது கூட சொன்னார்கள். அது கட்சியினரின் ஆசை வெளிப்பாடு. இதை தவறு என்று சொல்ல முடியாது. ஜனநாயகத்தில் எந்த விருப்பமும் நோக்கமும் கொண்டு இருக்கலாம். விஜய் மீது பற்று கொண்டவர்கள் சொல்லும் கருத்து கட்சியின் நிலைப்பாடு என்ற முடிவுக்கு வந்து விட முடியாது” என்றும் தெரிவித்தார்.
பா.ஜ.க. தலைவர்கள் மீது வழக்கு போட தவெக பயப்படுகிறது என்று உதயநிதி எழுப்பிய கேள்வி குறித்து, இதற்கு "தவெக தான் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார். சமீபத்தில் மாற்று சபாநாயகராக ஒரு பெண் உறுப்பினர் இருந்தது குறித்து, "பெண்களை அதிகார மையத்தில் அமர வைக்க வேண்டும் என்ற நிலைபாடு தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது. இது ஜனநாயகத்தின் வளர்ச்சியாக தான் பார்க்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்