

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணை செயலாளரும், மதுராந்தகம் இடைத்தேர்தல் வேட்பாளருமான பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்து, தவெக அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதில் விலைவாசி, மின் கொள்முதல் முடிவு மற்றும் நிர்வாகம் குறித்து காட்டமான கேள்விகளை எழுப்பி இருந்தார்.
தமிழ்நாட்டில் மாற்றத்தை தருகிறேன் என்று கூறிய ஆட்சிக்கு வந்த விஜய் சர்க்கார் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது மட்டுமல்லாது விலை ஏற்றத்தை கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் தங்கள் விலை மதிக்க முடியாத வாக்குகளை கொடுத்த நிலையில் தற்போது ஒவ்வொரு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.
பின்னர் தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் பேசிய வீடியோ பதிவை சுட்டிக்காட்டி, “அமைச்சர் அரிசி விலை ஏறவில்லை அப்படின்னு சொல்கிறார்.. அவர் அரிசி வாங்கி ‘சோறுதான் திங்குறாரான்னு’ தெரியவில்லை” என்று காட்டமாக பேசியிருந்தார்.
நான் இப்போ உணவுத்ததுறை அமைச்சருக்கு சவால் விடுகிறேன் என குறிப்பிட்ட பரந்தாமன், “இன்று மாலை நான் மயிலாப்பூர் வருகிறேன் அவரையும் வர சொல்லுங்கள்... மளிகை கடை காய்கறி கடைக்கு செல்லலாம் விலை உயர்ந்திருக்கிறதா? என்பதை பார்க்கலாம்” என சவால் விட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமனுக்கு நான் நேரடியாக சவால் விடுகிறேன். எதைப் பற்றியும் அக்கறை இல்லாத இந்த அரசாங்கம் வெறும் ரீல்ஸ் மட்டுமே எடுக்கிறார்கள். விலை ஏற்றம் இல்லை என்று கூறுகிறார்கள். விலை ஏற்றம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது ஒருபுறம் தீபாவளி வர இருக்கிறது. தீபாவளிக்கு திமுகவிற்கு என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள் இது சாமானிய மக்களின் பிரச்சினை என்று கூறுகிறோம்.
மின் பிரச்சினை அதிகமாக இருக்கிறது என மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். தமிழ்நாட்டை சுத்தமாக முடித்து விட்டார்கள். விலைவாசி உயர்வு குறித்து அதிகாரிகளை அழைத்து முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் நடத்தினாரா? தற்போது வரையும் செய்யவில்லை. இந்த அரசாங்கமும் சொத்தை அவர்கள் கொடுக்கும் வெங்காயமும், சொத்தை தான். மின்சாரம் பற்றாக்குறை ஒரு புறம் இருக்கிறது என்றால் காற்று இல்லை என்று கூறினார்கள். மற்ற மாநிலங்களில் மின்சாரம் குறைவான விலைக்கு வாங்குகிறார்கள் நீங்கள் ஏன் 35 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என்று கேட்டால் “கலெக்ஷன் குமாருக்கு” பதிலே இல்லை.
மின்சாரம் தட்டுப்பாடு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா தெரியாதா ? தமிழ்நாட்டின் முதலமைச்சர் நீங்கள் Action க்கு வாங்க sleep mode இல் இருந்து. பொது மக்களின் தேவையை பற்றி உங்களுக்கு கவலை இல்லை. இடதுசாரி சிந்தனைகள் இருக்கக்கூடியவர்கள் அனைவருமே இந்த அரசாங்கத்தை தற்போது இடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான் ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே உங்களை நிரந்தரம் செய்து என்று செவிலியர்களிடம் கூறினார், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. ஆனால் தற்பொழுது அதை செய்யவில்லை. இந்த அரசாங்கமே ஒரு திருட்டு அரசாங்கம் மக்கள் வாக்குகளை திருடுகிறார்கள், மற்ற கட்சியின் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களை திருடுகிறார்கள்
“ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கையாளர்களை முதல்வர் சந்திக்கிறாரா? பதில் அளிக்கிறாரா…”என்று கேள்வி எழுப்பிய பரந்தாமன் இது ஒரு பிராடு கவர்ன்மென்ட் என்று சாடினார். தமிழக வெற்றி கழகம் அரசியல் ரீதியாக செயல்பட்டால் கூட பரவாயில்லை reels மட்டும் தான் செய்து வருகிறார்கள். தமிழக வெற்றி கழகத்தில் இருப்பவர்களுக்கு சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை என்று சாடியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்