ராகுல் தான் PM; “தவெக உடன்படவில்லை என்றால்.. கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்” - அமைச்சர் ராஜேஷ்குமார் ஆவேசம்!

“வருகிற 2029 ல் பாரத பிரதமர் ராகுல் காந்திதான்” என்றும் “அதில் ஏதேனும் மாற்றம் உண்டு என தமிழக வெற்றிக்கழகம் கூறினால்.."
vijay and rahul
Published on
Updated on
1 min read

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய தமிழக வெற்றி கழகத்திற்கு கூட்டணி ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பெற்றது. மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையும் தவெக உடனே எதிர்கொள்ளும் என்றும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் சமீபகாலமாக தவெக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முதலவர் விஜய் தன அடுத்த பிரதமர் என்று பேசி வந்தனர். மேலும் இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரை மக்கள் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள் என்ற கேள்விக்கு ‘இந்தியா டுடே - சி வோட்டர்’ அமைப்பு நடத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பில், தமிழக முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். அந்த சர்வேயில்  நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி 2வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது தவெக தலைவர் விஜய்யை 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதாக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசி வருவது காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் “அமைச்சர்கள் ரசிக மனநிலையில் பேசுவதாகக்” கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார்  மீண்டும் கூட்டணி குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “வருகிற 2029 ல் பாரத பிரதமர் ராகுல் காந்திதான்” என்றும் “அதில் ஏதேனும் மாற்றம் உண்டு என தமிழக வெற்றிக்கழகம் கூறினால் தவெக அமைச்சரவையில் இருக்கும் இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களும் தங்களது பொறுப்புகளை துறப்போம்” என குமரி மாவட்டம் வெட்டுமணியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் குமரி மேற்கு மாவட்ட தலைவர் பதவி ஏற்பு விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் சபதம்.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற நிலையில் குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர்களை அவர் நியமித்தார். அதன்படி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்ட ஜார்ஜ் ரபின்சன் பதவி ஏற்பு விழா வெட்டுமணி சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com