"கைது செய்த போலீஸ்.. தோளில் கைபோட்டு வந்த ஆதவ் அர்ஜுனா!" ஆதரவாக நிற்கும் உதயநிதி - ராப் பாடகர் முதல்வரை சந்தித்து பேசியது என்ன?

நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள் கேட்கப்பட வேண்டுமே தவிர, அடக்கப்படக் கூடாது"
Arivu NEET protest
Arivu NEET protest
Published on
Updated on
2 min read

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ராப் பாடகர் அறிவு சென்னையில் தலைமை செயலகம் முன்பு போராட்டம் நடத்தியதன் காரணமாக போலீசார் அவரை கைது செய்தனர். தலைமை செயலகத்திற்குள் நுழைய முயன்ற அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்பு ராப் பாடகர் அறிவு தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து பேசினார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜென் Z இளைஞர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு பொறுப்பேற்றுக்கொண்டு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இளைஞர்கள் இரவு பகல் பாராது அங்கேயே தங்கி தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. அது மட்டுமின்றி நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகர் கிஷோர் போன்றோரும், தற்போது மத்திய அரசுக்கு அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில், காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் புது தில்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை நோக்கி போராட்டம் நடத்தினர். இதில் நேற்று காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் பல்வேறு இளைஞர்கள், இளம்பெண்கள் உட்பட பலரும் படுகாயங்கள் அடைந்தனர். மேலும், கண்ணீர் புகை குண்டுகளும் அவர்கள் மீது வீசப்பட்டது.

இந்நிலையில், தற்போது நாட்டின் பல இடங்களில் இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் தலைமை செயலகத்தின் முன்பு ராப் பாடகர் அறிவு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் காவல் துறையினர் அவரை கைது செய்து வேனில் ஏற்றினர். இதற்கு முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரபூர்வ X தளப்பக்கத்தில், "தவெக தலைமையிலான விஜய் தலைமையிலான தமிழக அரசை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக, ராப் பாடகரும் என் அன்பு சகோதரருமான 'தெருக்குறள்' அறிவுவை கைது செய்தமைக்கு எதிராக. அவரது குரல், தமிழ்நாட்டின் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் பிரதிபலிக்கிறது. நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான தலைமை நீதிபதி தலைமையிலான பேரணிகளும் போராட்டங்களும் வேகம் பெற்று வரும் வேளையில், தவெக அரசு, அறிவுவைக் கைது செய்துள்ளது. நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கத் திட்டமிட்டுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இது ஒரு கவலையளிக்கும் செய்தியாகவே உள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளால் நிறைந்தது மட்டுமல்ல; அது ஒரு மோசடியாகவும் மாறிவிட்டது. நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள் கேட்கப்பட வேண்டுமே தவிர, அடக்கப்படக் கூடாது" என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து, ராப் பாடகர் அறிவு, தலைமை செயலகத்தில் முதலவர் விஜயை சந்தித்து பேசினார். பின்னர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவின் தோள் மீது கைபோட்டு அவரது காரில் வழியனுப்பிவைத்தார். பாடகர் அறிவும் அமைச்சருடன் கைகுலுக்கி விட்டு காரில் அமர்ந்து சென்றார். இதனிடையில் பத்திரிகையாளர்கள் பாடகர் அறிவிடம் கேள்வினை எழுப்ப எதற்கும் பதிலளிக்காமல் சென்றுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com