ஆர்.கே. நகர் தொகுதி.. வெற்றி யாருக்கு? விஜய் வருகையால் என்ன பாதிப்பு?

திமுக 31% வாக்குகளுடன் நூலிழையில் வெற்றியைத் தவறவிடக்கூடும்
R.K. Nagar constituency
Published on
Updated on
1 min read

மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் ஆர்.கே. நகர் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

ஆர்.கே. நகர் மீண்டும் ஒரு அரசியல் மாற்றத்திற்குத் தயாராகிவிட்டது என்பதை மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் ஆய்வு உறுதி செய்கிறது. 2024-ல் அதிமுக தனது வாக்குகளை 28%-லிருந்து 33.31% ஆக உயர்த்தியுள்ளது. பூத் வாரியான கணக்கீட்டில் அதிமுக 87 பூத்துகளில் மிக வலுவாக உள்ளது. திமுக வெறும் 61 பூத்துகளில் மட்டுமே தனது பலத்தை வைத்துள்ளது.

தவெக தலைவர் விஜய் இங்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 20% வாக்குகளை தவெக பிரிக்கப்போவது திமுகவுக்குப் பெரும் பின்னடைவாக அமையும். குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சாக்கடை வடிகால் பிரச்சினை மக்களின் பிரதான கோபமாக உள்ளது.

ஆர்.கே. நகர் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

2026 தேர்தல் கணிப்பு தரவுகள்:

கான்சிலிடிக்ஸ் ஆய்வின்படி, அதிமுக 32% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற வாய்ப்புள்ளது. திமுக 31% வாக்குகளுடன் நூலிழையில் வெற்றியைத் தவறவிடக்கூடும். தவெக 20% வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 1% வாக்கு வித்தியாசம் என்பது ஆர்.கே. நகர் தொகுதியை மீண்டும் அதிமுகவின் கோட்டையாக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com