
சென்னை மாநகராட்சியில் 4 மற்றும் 5ஆம் மண்டலங்களில் பணி புரியும் தூய்மை பணியாளர்களின் பணியை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 10 -ஆவது நாளாக சென்னை மாநகராட்சி அலுவலகம் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுவரை 6 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்து, தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில், மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் உழைப்போர் உரிமை இயக்க பிரதிநிதிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதற்கெல்லாம் இடையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் ஒப்பந்த நிறுவனத்துடன் பேசிவிட்டு வெளியில் வருகையில் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது தூய்மை பணியாளர் போரட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு திமுக வாக்குறுதியில் “தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம்”செய்யப்படும் என கூறியிருந்தீர்கள் என கேட்டபோது “எங்கே கொடுத்தோம், யார் கொடுத்தது.. கொடுங்க” என பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் கேட்டிருப்பார், அப்போது “திமுக தலைவர் ஸ்டாலின்” -தான் தந்தார் என செய்தியாளர் சொல்கையில், நீங்கள் எந்த பத்திரிகை என கேட்டிருப்பார், அதற்கு அந்த பத்திரிகையாளர் “நீலம்” என சொன்னதும் அவரை சிறுமைப்படுத்தும் வகையில் கோவமாக பேசியிருப்பார்.
அவரின் இந்த மிரட்டல் தொனியிலான இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
இந்நிலையில் இந்த பிரச்னை குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஊடகவியலாளர் சவுக்கு சங்கர், “முதலில் துப்புரவு பணியாளர் எந்த துறையின் கீழ் வருவர். நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் துறையை சார்ந்தது இதற்கு பொறுப்பு அமைச்சர் திரு. கே.என். நேரு, இதுநாள் வரையில் ஒருமுறை கூட போராட்டக்காரர்களை சென்று அவர் சந்திக்கவில்லை. அதற்க்கு பதிலகத்தான் “தேங்காய் மூடி” அமைச்சர் தேங்காய் மூடியை போலவே உருண்டுகொண்டிருக்கிறார். அறநிலையத்துறைக்கு இதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் யோசிக்கலாம், குப்பைகளை அகற்றும் ஒப்பந்தத்தை பெட்ரா ராம்கி நிறுவனம் துறை சார்ந்த அமைச்சரை மட்டும் கவனித்துவிட்டு சென்றுவிட்டது, ஆனால் சென்னையின் “ராஜாவான” என்னை கவனிக்காமல் குப்பையை நீங்கள் எப்படி ஆளமுடியும் என்ற ஆத்திரத்தில் தான் சேகர் பாபு இதில் தலையிடுகிறார். மேலும் சேகர் பாபு நினைத்துக்கொண்டார், “2 நாள் போராட்டம் செய்வார்கள், மீண்டும் போலீசை விட்டு மிரட்டினால் கலைந்து விடுவார்கள், பணப்பட்டுவாடா முடிந்த பிறகு போலீசை வைத்து கைது செய்துகொள்ளலாம்,” என்று. ஆனால் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
மேலும் ஆளுங்கட்சிக்கே ஆபத்தான ஒரு தொழிலாளர் போராட்டமாக இது மாறிவிட்டது. 7 நாட்கள் அந்த தொழிலாளர்கள் மழையிலும், வெளியிலும், பாடுபட்டு போராட்டம் நடத்தியதை தினமும் அங்கு வந்து செல்லும் சேகர் பாபு பார்த்துக்கொண்டுதானே இருந்தார். மேயர் ப்ரியா பார்த்துக்கொண்டுதான் இருந்தார். எங்கே முன் வாசல் வழியாக சென்றால் கோரிக்கை வைப்பாளர்கள் என பயந்து பின் வாசல் வழியாக சென்று வரீர்கள். மேலும் பத்திரிகையாளர்களை மிக மோசமாக நடத்துகிறார் சேகர் பாபு. அந்த காணொளியில் அவர் உடல்மொழியை பார்த்தீர்களா? சிறுமை படுத்திவிட்டாராம். வாக்காளன் யார் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லவேண்டியது அரசியல்வாதியின் கடமை. இத அராஜக போக்கால் தான் மக்கள் அவர்களை வெறுக்கின்றனர்” என பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.