சென்னை கிழக்கு திமுக மாவட்டம் சார்பாக எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு கே.பி.பார்க் ஹவுசிங் போர்டு மற்றும் சூளை பகுதிகளில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு அன்னதான உணவுகளை வழங்கினார். உடன் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது
முதலமைச்சர் பிறந்தநாளை ஓட்டி நடைபெற்று வரும் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் தினமும் பொதுமக்களுக்கு அன்னதான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் மகிழ்ச்சியாக உணவுகளை பெற்று வருகிறார்கள்.
சீமானை சந்தித்து Fight பண்ணிக்கிட்டு இருங்க ணா Strong ஆ இருங்க விட்டுடாதிங்க ணா என அண்ணாமலை பேசியது குறித்தான கேள்விக்கு
இரண்டு பேரும் பண்றது Shadow fighter, அவர்கள் நிழலோடு யுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள், நாங்கள் நிஜத்தோடு யுத்தம் செய்து கொண்டிருக்கிறோம் அவர்களது யுத்தத்திற்கும், திமுகவின் யுத்தத்திற்கும் பல மாறுபாடுகள் வேறுபாடுகள் உள்ளது என தெரிவித்தார்.
கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு வந்துள்ளது இதுகுறித்து இந்து சமய அறநிலைத்துறை என்ன முடிவு எடுக்க இருக்கின்றது என்பது குறித்தான கேள்விக்கு
நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்கனவே பட்டா வழங்குவது தொடர்பாக தடை அணை விதித்திருக்கிறது தொடர்ந்து மேல்முறையிடு செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கின் இறுதி தீர்ப்பு வந்த பிறகு முதல்வரின் கவனித்திற்கு கொண்டு சென்று இந்து சமயஅறநிலையத்துறையும் அரசும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கும் என தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமைகள் எதிராக விழுப்புரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்தான கேள்விக்கு
போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் குறிப்பிட்ட இடங்களை நடத்துவதற்கு இந்த ஜனநாயக ஆட்சியில் அனுமதி அளிப்பது போல் இவர் எந்த ஆட்சியில் அனுமதித்ததில்லை. அதே நேரத்தில் போராட்டம் என்ற போர்வையில் மக்களுக்கு இடையூறும் மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படும் போது அதற்கு தகுந்தார் போல் காவல்துறை எடுக்கின்ற நடவடிக்கை எனவும் இதற்கும் அரசை சார்ந்து குற்றச்சாட்டு வைப்பதற்கும் சம்பந்தமில்லை எனவும் தெரிவித்தார்.
தமிழை விட சமஸ்கிருதம் பழமையான மொழி என்பதால் தான் தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சனை சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்து கொண்டிருக்கிறது என நாடாளுமன்றத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பேசியது தொடர்பான கேள்விக்கு
திருக்கோவிலில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை வழிபாட்டை தடுக்கவில்லை அதே நேரத்தில் அன்னைத் தமிழ் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். தமிழில் அர்ச்சனை செய்யும் போது அர்ச்சனை சீட்டுக்கான கட்டணத்தில் 60% ஈட்டுத்தொகை வழங்கிக் கொண்டிருக்கிறோம். முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு 13 போற்றிப் புத்தகங்களை வெளியிட்டார். ஒவ்வொரு கோயில்களிலும் அன்னை தமிழ் அர்ச்சனை நடைபெறும் என்றும் அதற்கு உண்டான அர்ச்சகர் பெயரும் அச்சகரின் கைபேசியின் எண்களும் திருக்கோவில்களின் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தேவாரம் என்றாலும் தமிழ் திருவாசகம் என்றாலும் தமிழ் அர்ச்சனை என்றாலும் தமிழ் தமிழை உலகமெங்கும் பரவச் செய்யும் முதுகெலும்பு உள்ள முதலமைச்சர் எங்கள் முதலமைச்சர் என தெரிவித்தார்.
தமிழ் மட்டும் சாத்தியமாகுமா என்ற கேள்விக்கு
எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவரனகள் அல்ல ஒரு மொழியை திணிக்கின்ற போது தான் எதிர்த்து நிற்கிறோம். தமிழும் அந்த வகை அர்ச்சனையில் இருக்கும். எங்களுக்கு எங்கள் தமிழ் மொழி பல்லாயிரம் நெடுங்கால பன்மையான தொன்மையான மொழி எனவும் தமிழுக்கும் தமிழுர்க்கும் இடர் என்றால் தமிழுக்கு தீங்கு என்றால் தமிழுக்கு இன்னல் விளைவித்தால் உயிர் என்றாலும் களத்தில் முன் நின்று கொடுப்பதற்கு தயார் தயார் தயார் என முதல்வர் அறிவித்திருக்கிறார் அவர் வழியில் ஆயிரம் கணக்கான லட்சக்கணக்கான திமுக தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்கள் அணிவகுத்து நிற்கிறார்கள்.
2026 இல் இதை திணிப்பவர்கள் மீது மக்கள் அந்த வெறுப்பை காட்டுவார்கள் என தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்