
அதிமுகவில் கடந்த சில மதங்களாகவே உட்கட்சி பூசல்கள் இருந்து வரும் நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி மீதான கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூட “நான் அம்மா, எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கட்சியில் இருக்கிறேன் என் பொறுமையை சோதிக்காதீர்கள்” என பேசி தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.
ஆனால் அதற்கு பிறகு பட்ஜெட் கூட தொடரில் அதிமுகவுடன் இணைத்து செயல்பட்டிருந்தார். மேலும் மாநில கோரிக்கை ஒன்றின் போது அவர் முதலில் பேசும் வாய்ப்பை அவருக்கு அதிமுக அளித்திருந்தது. தொடர்ந்து செங்கோட்டையன் பாஜக தலைவர்களுடனும் தொடர்பில் இருந்தார். இதை எல்லாம் வைத்து பார்த்த போது உட்கட்சி பூசல் சரியாகிவிட்டது என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் இன்று நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் “உங்களுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கிறது” என கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு செங்கோட்டையன் வரும் வெள்ளிக்கிழமை உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன் என கூறியுள்ளார். அவர் என்ன பேச போகிறார், ஏற்கனவே அதிமுக தலைமை மீது வைத்த குற்றச்சாட்டுகளை பற்றி பேச போகிறாரா அல்லது எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பற்றி பேசப்போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடம் அதிகரித்துள்ளது.
மேலும் சில அரசியல் விமர்சகர்கள் செங்கோட்டையன் கட்சியை விட்டு விலக வாய்ப்புள்ளதாக கருது தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் அவர் எடப்பாடியின் மீதான கருத்து வேறுபாட்டை வெளிப்படையாக தெரிவிப்பார் என்றும் தலைமை மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.