“அண்ணன் செங்கோட்டையன்”... இனி தவெக-விற்கு நல்ல காலம் தான் - விஜய் பரபரப்பு பேட்டி!

இதனை தொடர்ந்து இன்று தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார்...
“அண்ணன் செங்கோட்டையன்”... இனி தவெக-விற்கு நல்ல காலம் தான் - விஜய் பரபரப்பு பேட்டி!
Published on
Updated on
1 min read

அதிமுகவின் முன்னாள் அமைச்சராக இருந்த செங்கோட்டையன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகவும் அவர்களுடன் சேர்ந்து செயல்பட்டதாகவும் கூறி கடந்த மாதம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து அவரது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.

பின்னர் தொடர்ந்து அமைதி காத்து வந்த செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் நேற்று அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனை தொடர்ந்து இன்று சென்னை பனையூரில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். இவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் திருப்பூர், நீலகிரி,கோவை, ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கட்சியின் பொதுச் செயலாளருக்கு இணையான அங்கீகாரம் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் விஜய்யுடன் நேரடி தொடர்பில் என சொல்லப்பட்டுள்ளது. அதிமுகவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பணியாற்றியவர் செங்கோட்டையன், இவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்தவர் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைத்திருக்கிறார். இது தவெக -விற்கு மிகப்பெரிய பலமாக அமையும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

கொங்கு மண்டலங்களில் அதிமுகவின் முகமாக இருந்தவர் செங்கோட்டையன் அவர் தற்போது தவெக-வில் இணைத்துள்ள நிலையில் அதிமுகவின் ஓட்டுக்களை மட்டும் அவர் சிதறடிப்பாரா அல்லது அப்பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தினை நிலைபெற செய்வாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். செங்கோட்டையுடன் அவரது ஆதரவாளர்கள் சிலரும் தமிழக வெற்றி காலத்தில் இணைந்திருக்கின்றன. தவெக- வில் இணைந்தது ஏன்? விஜய் செங்கோட்டையனிடம் என்ன பேசினார், செங்கோட்டையனின் அடுத்த செயல்பாடு என்னவாக இருக்கும் என்பதை குறித்து சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பேசியுள்ள விஜய் “20 வயதிலேயே எம்.எல்.ஏ என்ற பதவியை வகித்தவர் கட்சியின் இரு பெரும் தலைவர்களின் நம்பிக்கையாக இருந்தவர். 50 வருடங்களாக ஒரே இயக்கத்தில் பணியாற்றியவர் அண்ணன்  செங்கோட்டையன் அவரது அரசியல் அனுபவமும், களப்பயணனும் நமது தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு பெரிய உறுதுணையாக அமையும் இனி நல்லதே நடக்கும் நல்லது மட்டும் நடக்கும் வெற்றி நிச்சயம்” என கூறியுள்ளார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com