

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் “புரட்சி தலைவரின் காலத்திலும் சரி புரட்சி தலைவி அம்மாவின் காலத்திலும் சரி இயக்கத்திற்காக அயராது உழைத்தவன் நான், அம்மாவின் மறைவிற்கு பிறகு எனக்கு இரண்டு முறை வாய்ப்புகள் கிடைத்திருந்தது இந்த இயக்கம் உடைந்து விடக்கூடாது என்பதற்காகவும் இயக்கத்திற்கு எந்த தடையும் வந்துவிடக்கூடாது எனவும் நான் எனது வாய்ப்புகளை விட்டுக் கொடுத்துவிட்டேன்.
எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளரான பிறகு 2019 ல் இருந்து அவர் எடுத்த முடிவின் காரணமாக கலக்கம் வெற்றி வாய்ப்பை இழந்ததை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். பழனிசாமிக்கு பரிந்துரை கடிதத்தில் அனைவரிடத்திலும் ஒப்புதல் வாங்கி அதை செய்தியாளர்களிடம் தெரிவித்தது நான், கழகத்தின் வெற்றியை மனதில் வைத்து வெளியில் சென்றவர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் நாங்கள் ஆறு பேர் சென்று அவரை சந்தித்து பேசினோம், ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். செய்தியாளர்களிடம் கூட ‘நான் அப்படி யாரையும் சந்திக்கவில்லை’ என தெரிவித்திருந்தார்.
அண்ணல் அதன் பிறகும் நான் பலமுறை அவரிடம் இதை பற்றி பேசி இருக்கிறான். அதன் பிறகு தான் நான் மனம் திறப்பதாக சொல்லி செய்தியாளர் சந்திப்பில் அனைத்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன். அப்போது கூட நான் அவருக்கு கெடு விதிக்கவில்லை, எங்களது நோக்கம் கழகம் செழிப்போடு இருக்க வேண்டும். மீண்டும் புத்துணர்ச்சி பெற்ற வெற்றி பெறவேண்டும். அதற்கு நான் எப்போது அயராது பாடுபடுவேன். அனைவரும் ஒன்று திரண்டு கழகத்தை வேற்று பெற செய்யவேண்டும் என்பதுதான் மக்கள் மற்றும் கழக தொண்டர்களின் நோக்கமாக இருக்கிறது.
அதற்காக தான் நான் தேவர் ஜெயந்தியில் கலந்துகொண்டு அவ்ருக்கு மரியாதையை செலுத்தினேன். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் நான் பேசியது உண்மைதான். ஆனால் நான் திராவிட முன்னேற்ற கழகத்திற்காக செயல்படுகிறேன் என சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து, தேசத்திற்காக போராடி உயிர் தியாகம் செய்தவருக்கு மரியாதை செலுத்தியதற்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து என்னை நீக்கி எடப்பாடி எனக்கு பரிசு கொடுத்திருக்கிறார். 53 ஆண்டுகள் கழகத்திற்காக பணியாற்றிய நான் இந்த அறிவிப்பால் மனம் வருந்துகிறேன், கண்ணீர் சிந்துகிறேன், இரவு முழுவதும் நான் தூங்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.