“எல்லாம் AI.. நாளைக்கு நான் ஸ்டாலின் சார் வீடியோ விடவா?" - சத்யபாமா விவகாரத்தில்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

"காலையில ரிலீஸ் பண்ணும் போதே தெரியலையா? எல்லாம் திமுக வேல தான்” என தெரிவித்தார்
aadhav arjuna
Published on: 
Updated on: 
2 min read

சென்னையில் வில்லிவாக்கம் தொகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் அயனாவரம் சமூக நல மையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம் தங்க மோதிரங்களை அணிவித்தார், அதனை தொடர்ந்து அங்கிருந்த அரசு பள்ளி ஆன சென்னை மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்து அங்கிருந்து மாணவர்களுடன் கைப்பந்து விளையாட்டுகளை விளையாடினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடைத்தேர்தல் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் 31 கோடி ரூபாய் குறித்த சர்ச்சை வீடியோ வெளியானது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “அது AI வீடியோ தான், நாளை காலை ஸ்டாலின் சார் 1,000 கோடி செலவு பண்ண மாதிரி நானும் ஒரு வீடியோ விடவா? எல்லாம் AI வீடியோ.. காலையில ரிலீஸ் பண்ணும் போதே தெரியலையா? எல்லாம் திமுக வேல தான்” என தெரிவித்தார்.

தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளராக சத்யபாமா அறிவிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட கட்சியை குறித்து அவர் பேசியதாக ஒரு வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், அது சித்தரிக்கப்பட்டது என்று சத்தியபாமா தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் தாராபுரத்தில் போட்டியிட்ட சத்யபாமா வெற்றி பெற்று, 20 நாட்களில் தனது MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தார். காலியான அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தவெக சார்பில் மீண்டும் அதே தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தொகுதி மக்களிடையே அதிருப்தியையும், அரசியல் வட்டாரத்தில் விவாதங்களையும் ஒரு சேர எழுப்பியது. மேலும் எதிர்கட்சிகளால் விமர்சனத்திற்கும் உள்ளானது. 

பின்னர் பிரச்சார களத்திலும் தவெக வேட்பாளர் சத்யபாமா, தொகுதி மக்களிடையே எதிர்ப்பை சந்தித்து வந்ததாக செய்திகள் வெளியானது. தவெக, அதிமுக, திமுக, நாதக மற்றும் கம்யூனிஸ்ட் என 5 முனை போட்டியாக மாறியது. மேலும் அவர்களின் பிரச்சார மேடைகளில் சத்யபாமா-வின் மீது பல்வேறு விமர்சனங்கள் மற்றும் குற்றசாட்டுகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. பேட்டி வாங்கியதாகவும், அமைச்சர் பதவிக்காக கட்சி மாறியதாகவும் விமர்சிக்கப்பட்டார். இந்த விமர்சனங்களால் பிரச்சார கூட்ட மேடையில் கண்கலங்கி அழுதும் இருந்தார்.

தேர்தல் நாள் (அக்டோபர் 6) நெருங்கிய நிலையில் நேற்று சத்யபாமா இருப்பது போன்று ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில் சத்யபாமா தேர்தலுக்காக 31 கோடி செலவு செய்ததாகவும், தவெக-வை குறித்து சர்ச்சை கூறிய கருத்துக்களை தெரிவிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ வைரலானதை அடுத்து பல்வேறு தரப்பினரும் க்ளெவி எழுப்பி வந்தனர். இதையடுத்து இன்று வாக்குசாவடிக்கு வந்த தவெக வேட்பாளர் சத்யபாமாவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். "அது சித்தரிக்கப்பட்ட வீடியோ; மக்கள் தெளிவாக உள்ளனர்; இது தேர்தலில் எதிரொலிக்காது” என பதிலளித்திருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com