"ஆட்சியரை கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான்..." - CM விஜய்யை சாடிய ஸ்டாலின்!

"Judicial Overreach-ஆல் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட தி.மு.க.வுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை!" - CM விஜய்
Stalin Slams CM Vijay Over Thiruparankundram Deepam Row
"ஆட்சியரை கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான்..." - CM விஜய்யை சாடிய ஸ்டாலின்!
Published on: 
Updated on: 
1 min read

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை சூழ திருப்பரங்குன்றம் மலையில், தமிழக அரசால் சர்வே கல் எனக் கூறப்படும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

இந்த தீபம் ஏற்றப்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், திமுகவினர் உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து கருத்துக்கூறவில்லை என்றும் சிலர் விமர்சித்தனர்.

இந்தநிலையில் "திமுகவுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அந்தக் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின்.

அவரது பதிவில், "திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா?

அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட ஆட்சியரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் இப்போதுள்ள முதலமைச்சரின் நிர்வாகத் திறன்!" என முதல்வர் விஜய்யை கடுமையாக சாடினார்.

காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற காட்சிகள் குறித்து, "‘Comedy Show Performer’ முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த Opinion-உம் Accountability-யும் கோராமல், தி.மு.க.வைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்?

Judicial Overreach-ஆல் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட தி.மு.க.வுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை!

ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் தி.மு.க. என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும்! வெல்லும்!" எனக் கூறியுள்ளார்.

Stalin Slams CM Vijay Over Thiruparankundram Deepam Row
``மக்களவை MP-கள் எண்ணிக்கை அதிகரிப்பு.. மாநிலங்களவை நிலை என்ன?" - மாநில உரிமைகள் பறிபோகிறதா?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.