சென்னையில் தொடங்கிய ‘சோசியல் ஒர்க்’... இப்போ லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர்! யார் இந்த நித்யா ராமன்?

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முதல் தெற்காசிய மேயர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்
nithya raman
Published on: 
Updated on: 
2 min read

இந்திய வம்சாவளியான சமூக செயற்பாட்டாளர், தற்போது அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த வரலாற்று வெற்றிக்கு சொந்தமான நித்யா ராமன் இந்திய வம்சாவளியினர் மத்தியில் மட்டுமின்றி தற்போது சர்வதேச அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளார். குறிப்பாக, கேரளாவில் பிறந்த ஒருவர் அமெரிக்காவின் முக்கியமான நகரங்களில் ஒன்றின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்கா இடைக்கால தேர்தலில், தற்போதைய மேயர் கரேன் பாஸை எதிர்த்து போட்டியிட்ட நித்யா ராமன் வென்றுள்ளார். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முதல் தெற்காசிய மேயர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். 

யார் இந்த நித்யா ராமன்:

கேரளாவில் பிறந்த நித்யாராமன், தனது ஆறு வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர், பின்னர் புகழ்பெற்ற மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகமான MIT-யில் நகர்ப்புறத் திட்டமிடலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். தனது உயர்கல்வியை முடித்த பிறகு இந்தியாவுக்குத் திரும்பிய அவர், இங்குள்ள சமூகப் பிரச்சினைகள் மற்றும் நகர்ப்புற அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகளில் தந்மன்னை ஈடுபடுத்திக்கொண்டார்..

தமிழக மக்களுக்கு நித்யா ராமனை இன்னும் நெருக்கமாக்கும் ஒரு முக்கியமான தகவல் உள்ளது. சென்னையில் 'ட்ரான்ஸ்பரண்ட் சென்னை' (Transparent Chennai) என்ற பொதுமக்கள் நலன் சார்ந்த ஆய்வு முன்னெடுப்பை தொடங்கியவர் நித்யா ராமன். நகர்ப்புறத்தில் ஏழை மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர், சுகாதாரம், பொதுக் கழிப்பறைகள், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளைத் தரவுகள் மூலம் ஆவணப்படுத்துவதும், சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ பதிவுகளுக்கும், கள நிலவரத்திற்கும் இடையே உள்ள முரண்பாடுகளை வெளிக்கொண்டு வருவதும் இந்த அமைப்பின் நோக்கமாகும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் 700+ கழிப்பறைகள் இருப்பதாக அரசு தரவுகள் தெரிவித்திருந்த நிலையில், களத்தில் 572 மட்டுமே பயன்பாட்டில் இந்த மாய்த்து கண்டறிந்து கேள்வி எழுப்பியது. குறிப்பாக 

குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்துவதில் நித்யா ராமன் கவனம் செலுத்தியுள்ளார். மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பிய நித்யா ராமன், தனது சமூக பணிகளை இடைவிடாது தொடர்ந்தார். அங்கு வீடற்ற மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் சார்ந்த பிரச்சனை  உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து முன்னெடுத்தார்.

2020 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மன்றத்தின் நான்காவது மாவட்ட உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் அந்நகர மன்றத்தில் இடம்பெற்ற முதல் தெற்காசியர் மற்றும் முதல் ஆசிய அமெரிக்கப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். 2024ஆம் ஆண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மலிவு விலையில் வீடுகள் கட்டுவது, வீடற்ற மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது, உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது ஆகியவை நித்யா ராமனின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளாக உள்ளன.

ஜனநாயகக் கட்சி மற்றும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் அமைப்புடன் தொடர்புடைய நித்யா ராமன், நகர நிர்வாகத்தில் சமூக நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானி மேயராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது லாஸ் ஏஞ்சல்ஸிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் வெற்றி பெற்றிருப்பது அமெரிக்க அரசியலில் கவனிக்கத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. கேரளாவில் பிறந்து, சென்னையில் சமூகப் பணியாற்றி, அமெரிக்காவின் முக்கிய நகரத்தின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்துள்ள நித்யா ராமனின் பயணம், அவரது அரசியல் வெற்றியைத் தாண்டி இந்தியாவுடனான அவரது தொடர்பையும் மீண்டும் பேச வைத்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்