மாணவர்களே CM விஜய்யை சந்திக்க ரெடியா? 2026 கல்வி விருதுகள் விழா.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தவெக!

தற்போது இந்தாண்டு மாணவர்களுக்கான பாராட்டு விழா குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது
cm vijay
Published on: 
Updated on: 
2 min read

தமிழக வெற்றி கழக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான  விஜய், கடந்த 3 ஆண்டுகளாக (2023 முதல் 2025 வரை) 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த  மாணவ-மாணவிகளுக்கு கல்வி விருதுகளை வழங்கி வருகிறார். தமிழ்நாட்டின் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் மேடைக்கு அழைத்து, தனித்தனியாக சால்வை அணிவித்து, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருகிறார் விஜய்.

இந்த வருடம் சட்டமன்ற தேர்தல், விஜய் முதல்வர் பதவியேற்பு , அதை தொடர்ந்து இடைத்தேர்தல் என அடுத்தடுத்த அரசியல் பணிகளின் காரணமாக இந்த விழா குறித்து கட்சியின் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடபடவில்லை. அது அரசியல் வட்டாரத்திலும் பல விவாதங்களை எழுப்பியது. தற்போது இந்தாண்டு மாணவர்களுக்கான பாராட்டு விழா குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களைப் பாராட்டி, கல்வி விருதுகள், ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா வரும் நவம்பர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார்.

CM Vijay

சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டுவதுடன், அவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்பட உள்ளது.

CM Vijay

இதனிடையே, விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கான அனுமதி பாஸ்களை பெறுவதற்காக, சம்பந்தப்பட்ட ஐந்து மாவட்டங்களின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அமைச்சர் ஆனந்தை நேரில் சந்தித்துள்ளனர். அப்போது விழாவில் பங்கேற்க வேண்டிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான அனுமதி பாஸ்களை பெற்றுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து பாஸ்களை வாங்கி செல்ல உள்ளனர். மாணவர்களின் கல்விச் சாதனைகளைப் பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெறும் இந்த விழாவில் முதல்வராக பதவியேற்ற பின் விஜய் நேரடியாகப் பங்கேற்க உள்ளதால், தவெக நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்