பிடிப்பபட்டர் தனிஷ்க் கொள்ளையன் நிஷாந்த்! காதலியின் ஆசையை நிறைவேற்ற… ஹாலிவுட் ஸ்டைலில் போட்ட ஸ்கெட்ச்! சிக்கியது எப்படி?

"1ம் மற்றும் 2ஆம் தேதி தொப்பி அணிந்தவாறு இயல்பாக கடைக்குள் சுற்றி வந்துள்ளார்.."
பிடிப்பபட்டர் தனிஷ்க் கொள்ளையன் நிஷாந்த்! காதலியின் ஆசையை நிறைவேற்ற… ஹாலிவுட் ஸ்டைலில் போட்ட ஸ்கெட்ச்! சிக்கியது எப்படி?
Published on: 
Updated on: 
3 min read

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் நகை கொள்ளையடித்த கொள்ளையன்  நிஷாந்த் தர்மபுரி சேசம்பட்டி பகுதியில் பிடிப்பட்டார்.

 மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் தனிஷ்க் ஜுவல்லரி கடந்த மாதம் 15 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி கடையை ஊழியர்கள் திறந்த போது கடைக்குள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகள் சிதறிய நிலையில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் மேலாளர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்எஸ் காலனி காவல் துறையினர், கொள்ளை நடைபெற்ற பகுதியில் தடயவியல் நிபுணர்கள் மூலமாக தடயங்களை சேகரிக்க தொடங்கினர். மேலும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

அதில் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரைக்குமான பதிவுகளை பார்த்தபோது, சந்தேகிக்கும் வகையில் கையில் கட்டு போட்டபடி இளைஞர் ஒருவர், 1ம் மற்றும் 2ஆம் தேதி தொப்பி அணிந்தவாறு இயல்பாக கடைக்குள் சுற்றி வந்துள்ளார். அந்த காட்சிகளோடு 12 ஆம் தேதி முகமுடியுடன் வந்து கொள்ளையில் ஈடுபட்ட நபரின் அடையாளங்களை ஒப்பிட்டபோது இரு வீடியோவிலும் கையில் டாட்டூ இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் நகைக்கடையை ஒட்டிய பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவுகளை பார்த்தபோது இளைஞர் ஒருவர் முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்தவாறு கையுறை  ஆகியவற்றை அணிந்து பைக்கில் அதிவேகமாக கொள்ளையடித்த நகைகளுடன் சென்றது தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் ஆய்வு செய்ததில் மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெரு பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்ற  இளைஞர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது.

பின்னர் நிஷாந்த் குறித்த விசாரணையில் ஈடுபட்ட போது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர், youtube சேனல்களுக்கும் வீடியோ எடிட்டிங் பணியை அவ்வப்போது செய்து வந்துள்ளார். மேலும், கேரளா,  சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குத் தனது நண்பர்களோடு சேர்ந்து ஜாலி ரெய்டு போவது சுற்றுலா தளங்களுக்கு சென்று சுற்றி திரிவதும் என ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போது தனது கல்லூரி கால தோழியும் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சருமான மீனாட்சியையும் காதலித்துள்ளார்.

தற்போது மீனாட்சி புதிய வீடு கட்டிவரும் நிலையில் மீனாட்சிக்கு அதிகளவிற்கு பணம் தேவைப்படுவதாகும் பல்வேறு கடன்கள் இருப்பதாகவும் காதலன் நிஷாந்திடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதனால் உருகி போன நிஷாந்த் ஹாலிவுட் பட Money Heist பட ஸ்டைலில் நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்கான திட்டம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இருவரும் திட்டம் தீட்டி தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த 5 ஆம் தேதியன்று இளஞர் நிஷாந்த், தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில் மேலே அமைக்கப்பட்ட இரும்பு சாரத்தின் மூலமாக சென்று அங்கு லிப்டின் அருகே அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய அவசரகால வழியில் இருந்த வேலியை அகற்றிவிட்டு அதற்கு உள்ளே சென்றுள்ளார்.

கடைக்குள் புகுந்து செல்வதற்கான அதற்கு தேவையான டூல்ஸ்களுடன் 12ஆம் தேதி நள்ளிரவு இரும்பு சாரம் வழியாக மூன்றாவது தள மாடிக்கு சென்ற நிஷாந்த் லிப்ட் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் லிப்ட்  ரோபின் மூலமாக இறங்கி, ஷட்டரை உள்புறத்தில் இருந்து வெளியில் திறந்துள்ளார். பின்னர் ஷட்டரை மீண்டும் திறக்க முடியாமல் போய்விடும் என்பதால் ஷட்டரின் நடுவில் கம்பியை வைத்துவிட்டு மெதுவாக ஒவ்வொரு தளமாக இறங்கிச் சென்று பின் படிக்கட்டு வழியாக தரைத்தளத்தில் உள்ள நகை கடைக்குள் இறங்கியுள்ளார்.

இதை தொடர்ந்து கடைக்குள் விற்பனையாக வைக்கப்பட்டிருந்த நகைகளை ஒவ்வொன்றாக எந்தவித பதற்றமும் இன்றி எடுத்து பேக் ஒன்றில் பத்திரமாக வைத்துள்ளார். பின்னர் லிப்டில் உள்ள ஷட்டரின் உள்ள கம்பியை எடுத்துவிட்டு அதே லிப்டின் மூலமாக ஒவ்வொரு தளமாக கயிறு மூலமாக சென்று அங்கிருந்து சாரம் வழியாக இறங்கியுள்ளான்.

முன்னதாக நிஷாந்த நகைக்கடைக்கு பின்புற பகுதிக்கு நள்ளிரவு 1 மணி அளவிற்கு வந்த போது அங்குள்ள நாய்கள் நிஷாந்தை துரத்திய நிலையில் முதற்கட்ட  முயற்சியை விட்டுவிட்டு மீண்டும் அந்த பகுதியை சுற்றி வந்து பைக்கை நிறுத்திவிட்டு மேலே சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

கொள்ளையடிப்பதற்காக தனது காதலி கொடுத்த பைக்கை பயன்படுத்தி கொள்ளையடித்த பேக்குடன் நேரு நகர், மாடக்குளம், பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் சுற்றி வந்துள்ளான். இதையடுத்து அதிகாலை தனது தந்தை சுரேஷிடம் பேக் கொடுத்து வீட்டில் வைக்குமாறு தெரிவித்துள்ளான். நிஷாந்த் மீதமிருந்த நகைகளை எடுத்து பல்வேறு பகுதிகளிலும் பதுக்கி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது

இதனிடையே மாடக்குளத்தில் நிஷாந்த் குடும்பத்திற்கு சொந்தமான வயல்வெளிக்கு ஆட்டோவை எடுத்துச் சென்ற நிஷாந்த் தான் நகை கடைக்கு சென்றபோது வேவு பார்த்த உடைகள் மற்றும் கொள்ளையடித்த போது பயன்படுத்திய உடைகள் என அனைத்தையும் தீயில் இட்டு கொளுத்தி விட்டு அந்தப் பகுதியில் நகைகளை பதுக்கி வைத்து விட்டு மீண்டும் ஆட்டோ மூலமாக சென்றுள்ளான்.

பின்னர் CCTVயில் சிக்கிய பைக் யாருடையது என்ற அடிப்படையில் பார்த்தபோது திருப்பாலை பகுதியில் உள்ள நிஷாந்த் காதலியான மீனாட்சியின் பைக்கை கொள்ளை அடித்த நகைகளை எடுத்துச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து மூன்று நாட்களாக நிஷாந்தை காவல்துறையினர் தேடி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் செல்போன் நெட்வொர்க் மூலமாக காவல்துறையினர் பிடிக்க முயன்ற போதும் பிடிபடாமல் டிமிக்கி கொடுத்து வந்தார். பின்னர் செல்போன் மூலமாக காதலி மீனாட்சியை தொடர்புகொண்டு பேச முயன்ற போது, எங்கெல்லாம் நகைகளை பதுக்கி வைத்திருந்தார் என்பது குறித்தான தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது.

பின்னர் நிஷாந்தின் காதலியான மீனாட்சியையும் அவரது தந்தையும் சுமார் 5 கிலோ நகைகளுடன் போலீசார் கைது செய்தது. தற்போது தமிழகத்தையே உலுக்கிய தனிஷ்க் ஜுவல்லரி நகை கொள்ளை வழக்கில் தனி ஒருவனாக 2 முறை கடைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட நிஷாந்த் தற்போது தர்மபுரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.