யார் இந்த மீனாட்சி? திருடிய பின்னும் கேஷுவலாக போட்ட ரீல்ஸ்.. கொள்ளையன் நிஷாந்துடன் என்ன தொடர்பு?

மேலும் எஞ்சிய தங்கம் எங்கு பதுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து இன்ஸ்டா பிரபலம் மீனாட்சியிடம் நடத்திய விசாரணையில்
influencer Meenakshi
Published on: 
Updated on: 
2 min read

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 500 சவரன் நகைக் கொள்ளை போன வழக்கில் ஒரு அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொள்ளை நடந்த பகுதியில் கிடைத்த CCTV காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில் கொள்ளையன் தனிநபர் என்றும் சோலோவாக வந்தே கோடிக்கணக்கில் மதிப்புள்ள நகைகளை திருடி சென்றுள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்திருந்தது. கொள்ளையன் கடையை சில நாட்களாக நோட்டமிட்டு பக்காவாக திட்டம் போட்டு ஆட்டைய போட்டுள்ளார். கொள்ளையில் ஈடுப்பட்டவருக்கு நிச்சயம் தொழில்நுட்பம் சார்ந்த அறிவுகள் இருக்கும் என்றும், மேலும் படித்த பட்டதாரி இளைஞர் என்பதும் போலீசார் கணிப்பில் இருந்தது.

தீவிர தேடுதலுக்கு பிறகு போலீசார் கொள்ளையனை நேற்று நெருக்கிய நிலையில்… திரில்லர் சினிமாவில் வரும் ட்விஸ்ட் போல தற்போது இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சரான இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரும் தொழில்நுட்பம் சார்ந்த வீடியோக்களை பதிவிட்டு கண்டெண்ட் கிரியேட்டராக வலம் வந்துள்ளார். யூடியூபில் பிரபலமான டெக்பாஸ் சேனலில் சுமார் இரண்டரை ஆண்டுகள் வீடியோ ப்ரெசென்ட்டராகவும் பணியாற்றியுள்ளார். இதனால் மொபைல் செயலிகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் குறித்து இவருக்கு நன்கு தெரியும் என்றும் கூறப்படுகிறது. அவ்வவ்போது இவர் செய்யும் கிரிஞ் செயல்களால் ட்ரோலில்லும் சிக்கியுள்ளார். ஆனால் கடந்த 2 மாதமாக அந்த சேனலில் வந்த எந்த வீடியோவிலும் இவர் இல்லை.

மேலும் இவர் ஒரு தனி யூடியூப் சேனல் வைத்து, அதில் skincare மற்றும் புட் ரிவிவ் செய்து வந்துள்ளார். இவருக்கு 1.5 லட்சம் பாலோவர்ஸ் உள்ளனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்திற்கு பிறகும் இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டு வழக்கம் போல் இருந்துள்ளார்.

தற்போது நகைக்கொள்ளை வழக்கில் மீனாட்சியை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமறைவாக உள்ள பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த YouTuber நிஷாந்த் கிருஷ்ணாவின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் 15 கிலோ தங்கத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் எஞ்சிய தங்கம் எங்கு பதுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து இன்ஸ்டா பிரபலம் மீனாட்சியிடம் நடத்திய விசாரணையில் மதுரை மாடக்குளம் மலையடிவாரம் பகுதியில் தோண்டி கூடுதலாக நகைகளை பறிமுதல் செய்துள்ளது காவல்துறை. தற்போது அவரின் ஆண் நண்பர் நிஷாந்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.