போக்சோ வீரமணிக்கு எதிராக 10 சிறுமிகள் வாக்குமூலம்.. தெய்வமாக வந்து காட்டிக்கொடுத்த AI தொழில்நுட்பம்.. CM ஹேப்பி அண்ணாச்சி!

2024 ஆம் ஆண்டே இந்த சம்பவத்தை அறிந்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்..
gem veeramani pocso case
Published on: 
Updated on: 
2 min read

ஜெம் வீரமணி வழக்கில் அடுத்த திருப்பமாக பாதிக்கப்பட்ட 10 சிறுமிகளிடம் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெம் கிரானைட் தொழில் அதிபர் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கு நாட்டையே உலுக்கி வருகிறது. இதில் அரசியல் மற்றும் காவல் அதிகாரிகளின் தலையீடு இருப்பதாகவும், இந்த குற்ற செயல்களை மூடி மறைப்பதற்கு அவர்களுக்கு பல கோடி பணம் கை மாறியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய புகார்  ஒன்று வந்தது. அத்துடன் ஒரு பென்டிரைவ் கிடைத்துள்ளது. அதில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. வீடியோவில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுமியை ஆரம்பத்தில் அடையாளம் காண முடியாததால், வழக்கை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் இந்த வழக்கில் தலையீட்டை மீண்டும் விசாரணைக்கு தொடங்க உத்தரவிட்டது. இதையடுத்து போலீசாரின் விசாரணை தீவிரமடைந்தது. விசாரணையில் தேனாம்பேட்டையில், வீரமணி வாடகை வீடொன்றை எடுத்து, சிறுமிகளை ஏமாற்றி, அவர்களை படிக்கவைப்பதாகவும், புத்தாடை மற்றும் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தும் இந்த கொடூர சம்பவங்கள் அரங்கேறியது தெரியவந்தது

அதையடுத்து தொழில் அதிபர் வீரமணி 6 முதல் 16 வயது சிறுமிகளை, பாலியல் செயல்களில் ஈடுபடுத்திய வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். விசாரணை தீவிரமடைந்த நிலையில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணி கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது உதவியாளர் சாந்தி மற்றும் சாந்தியின் கணவர் மகேந்திர சிம்மனும் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மற்ற நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தினர். இந்த வழக்கில் மற்றொரு திருப்பமாக வீரமணியின் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் கணேசனும் கைது செய்யப்பட்டார். அவரது செல்போனில் இருந்த சிறுமிகளின் வீடியோ தொடர்பாக அவர் நீண்ட காலமாக போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமல் இருந்ததாகவும் விசாரணையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்.

இதற்கிடையே, வீரமணியுடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரகாஷ் உள்ளிட்ட சில முக்கிய நபர்களிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. SRMU தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், பணப் பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் ஆய்வு செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரகாஷ் வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரை இந்தியா திரும்பும்போது கண்காணிக்க லுக் அவுட் நோட்டீஸ் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தற்போது விசாரணையில் உள்ள நிலையில், ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது விரைவில் தெரியவரும். அவர்களிடம் இருந்து வாக்குமூலத்தையும் போலீசார் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீரமணி இது போல் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை மிரட்டிய சம்பவத்தை தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி, எஸ்டி பிரிவு நிர்வாகி ரஞ்சன் குமார், 2024 ஆம் ஆண்டே இந்த சம்பவத்தை அறிந்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காணமுடியாத நிலையில் மற்றொரு திருப்பம் நிகழ்ந்துள்ளது. ஜெம் வீரமணியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகளை தற்போது  ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்மூலம் அவர்களிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜெம் வீரமணிக்கு எதிராக 10 சிறுமிகளிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றதாக தகவல்கள் கிடைத்துள்ளன. Closer report-லில்  கொடுக்கப்பட்ட வீடியோவில் இருந்த சிறுமியும் அடையாளம் காணப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் வீரமணி மீது FIR பதிவு செய்தது முன்பே தெரியும், தான் மிரட்டப்பட்டதாக போலீசாரிடம் சிறுமிகள் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வாக்குமூலம் பலர் சிக்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது. சிறுமிகளை அழைத்து சென்றவர்கள், வேறு வரினும் இந்த குற்ற செயலில் சம்பந்தபட்டுள்ளார்களா போன்ற தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com