முதல்முறையாக வெளியானது ஜெம் வீரமணியின் "அந்தரங்க" வீடியோ.. பார்க்கவே கண் கூசும் அருவருப்பின் உச்சம்!

போயஸ் கார்டன் பகுதியில் ஒரு வீட்டை முழுவதுமாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதற்காகவே பயன்படுத்தியுள்ளார் வீரமணி.
Veeramani
முதல்முறையாக வெளியானது ஜெம் வீரமணியின் "அந்தரங்க" வீடியோ.. பார்க்கவே கண் கூசும் அருவருப்பின் உச்சம்!AI Generated
Published on
Updated on
2 min read

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் பெரும் பணக்காரருமான வீரமணி, சிறுமிகளை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்திய வழக்கு தமிழகத்தை உலுக்கியிருக்கிறது.

குறிப்பாக, ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் குற்றங்கள் நடந்துவரும் நிலையில், இதில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாமல், இதை மறைக்கத் துணையாக இருந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனப் பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

வீரமணி, தனது பாலியல் இச்சைக்காக ஏழைக் குழந்தைகள், கல்விக்காக உதவி கேட்டு வரும் குழந்தைகள் மற்றும் ஆசிரமங்களில் இருக்கும் குழந்தைகளை குறிவைத்து, ஆசை வார்த்தைகளைக் கூறி கொடூரங்களை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் அவருக்கு உடந்தையாக சாந்தி - மகேந்திர சிம்ஹன் என்ற தம்பதி செயல்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில், ஜெம் வீரமணியின் வீடியோவை வைத்திருந்ததாகக் கூறப்படும் கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், எஸ்.ஆர்.எம்.யு. தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

2003-ஆம் ஆண்டு, இந்த வலையமைப்பில் சிக்கிப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

போயஸ் கார்டன் பகுதியில் ஒரு வீட்டை முழுவதுமாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதற்காகவே வீரமணி பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுவரை எத்தனை குழந்தைகள் வீரமணியால் பாதிக்கப்பட்டனர் என்பது தெரியப்படுத்தப்படவில்லை. சிலர் தாமாக முன்வந்து வழக்கில் சாட்சியளித்து வருகின்றனர்.

30 ஆண்டுகளாக எந்தவித அச்சமும் இன்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ள வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகளைக் காப்பாற்ற ஒரு பெரிய நெட்வொர்க் உதவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஜெம் வீரமணி வழக்கில் முக்கிய ஆதாரமான வீடியோக்கள் அடங்கிய பெண்டிரைவ், சென்னையைச் சேர்ந்த சமூக சேவகரிடம் கிடைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதமே பதியப்பட்ட இந்த வழக்கை காவல்துறை முடித்து வைக்க முயன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அரசியல் கட்சிகள் வழக்கை திசைத் திருப்பியதாக, விசாரணையை தாமதப்படுத்தியதாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வழக்கு தொடர்பான பஞ்சாயத்தில் காங்கிரஸ் ரஞ்சன் குமார், ஜான் பாண்டியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பெயர்கள் அடிபட்ட நிலையில் அவர்கள் தனித்தனியாக விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் வீரமணி சிறுமியுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கசிந்துள்ளது. இந்தியா டுடே செய்திதளம் வெளியிட்ட அந்த வீடியோ கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Veeramani
ஜெம் வீரமணி வழக்கு.. மூன்று காவலர்களுக்கு சம்மன்.. நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட் கேட்கும் முதல்வர் விஜய்! கலக்கத்தில் "காக்கிகள்"
Veeramani
ஜெம் வீரமணி வழக்கில் மகனுக்கு ‘Look Out Notice’.. 2008-லேயே ரயில்வே பணியை ராஜினாமா செய்த கண்ணையா - 18 ஆண்டுகளாக SRMU-வில் அதிகாரத்தில் இருப்பது எப்படி?
Veeramani
ஜெம் வீரமணி வழக்கில் 'பலே' கட்டப்பஞ்சாயத்து.. 12 கோடி வேணும் என அடம்பிடித்த சாந்தி? யார் அந்த "காங்கிரஸ் மாவட்ட தலைவர்"?
Veeramani
ஜெம் வீரமணி POCSO வழக்கில்.. ‘Final Report’-ஐ ஏற்க மறுத்து கடைசி வரை உறுதியாக நின்ற நீதிபதி பத்மா - சல்யூட்!
Veeramani
"எனக்கு அந்த படம் எடுக்கும் போதே தெரிஞ்சிடுச்சு.. ரிலீஸ் அன்று காட்சிகளை நீக்க வச்சாங்க" - ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் புதிய திருப்பம்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com