

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆனா நிலையில் தற்போது வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்த முக்கிய திட்டமான “தாய்மாமன் தங்க மோதிர திட்டம்” தொடங்கி வைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தவெக வாக்குறுதியின்படி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 15 அன்று தொடங்க உள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் சி என். அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி இத்தட்டும் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டது. இந்த திட்டம் தேர்தல் பிரச்சாரத்தின் போதே கவனம் பெற்ற ஒரு திட்டமாக இருந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் விஜய் உத்தரவு வெளியிட்டார். அதனை அடுத்து வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைப்பார் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இதற்கு தகுதிபெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 22-2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தாய்மாமன் சீர் என்பது மரபு சார்ந்த ஒரு வழக்கமாக இருந்து வரும் நிலையில், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'தாய்மாமன் சீர்' 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதிகளில் விஜய் குறிப்பிட்டிருந்தார். தற்போது இது குறித்து முக்கிய அறிவிப்புகள் தமிழக தாய்மார்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும் இந்த திட்டம் அமல்படுத்த உள்ளது தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்